ஒரு கவிதை எழுதினேன்.. (சன்னல் என்னை திறந்தது)

57

பேருந்தோ
புகைவண்டியோ
வகுப்பறையோ,
சன்னாலோர இருக்கை
எல்லோருக்கும்
பிடித்தமானதுதான்.

சன்னல்கள்
மகத்தானவை.

சன்னல்களில்லாத
ஒரு உலகத்தை
கற்பிதம் செய்துபாருங்கள்,
வாழ்வது கடினம்
என்று தோன்றும்.

அறையை ஏன் இருட்டாக
வைத்திருக்கிறீர்கள்,
உங்கள் சன்னல்களைத்
திறந்து வையுங்கள்.

அதெல்லாம் இருக்கட்டும்,
அதன் கம்பிகளில்
அடிக்கடி வந்தமரும்
சிட்டுக்குருவியை என்றேனும் அவதானித்திருக்கிறீர்களா.

 

மோகன்.ச.

கிருஷ்ணாபுரம்
Leave a Reply

%d bloggers like this: