ஒரு கவிதை எழுதினேன் – தொலைந்த உறவுகள்

97

தொலைந்த உறவுகள்

நிறங்களினும் அடர்வான
உறவுகள்
நீர்த்துப்போவது குறித்து
யாருக்கும் கவலையில்லை.

தாத்தாக்கள்,பாட்டிகள்
மாமன்கள்,மாமிகள்
எங்கோ இருந்தும்
இல்லாமலிருக்கிறார்கள்
நம் பிள்ளைகளுக்கு.

நாளொன்றின் சரிபாதி நேரம்
வகுப்பறைக்குள் பழகியும்
ஆசிரியர்களோடு
சிநேகம் கொள்ள முடியாத
பிழைக்கு , பிள்ளைகள் பொறுப்பல்ல.

மோகன்.ச
கிருஷ்ணாபுரம்
Leave a Reply

%d bloggers like this: