ஒரு கவிதை எழுதினேன் – எங்கே அன்பு

74

ஒரு கவிதை எழுதினேன் – எங்கே அன்பு

ஒரு சிறு விதையால்
இவ்வளவு
பெரிய மரத்தையும்,

ஒரு சிறு துளியால்
இவ்வளவு
பெரிய மனிதனையும்,

சிறு தீப்பொறியால்
இவ்வளவு
பெரிய பிரளயத்தையும்
உருவாக்க
முடிகிறபோது,
நம்மால் ஏன்
முடிவதில்லை
சக மனிதர்களை
சிறுதுளி அன்பால் நேசிக்க.

மோகன்.ச.
Leave a Reply

%d bloggers like this: