ஒரு கவிதை எழுதினேன் – மாறாத மனசு

69

பூட்டை ஒருமுறை
இழுத்துப் பார்த்துவிட்டு
கிளம்புகிற வழக்கத்தை
விட முடிவதில்லை.

வேறொருவனுடன்
சிரித்துப் பேசுகிற
மனைவியை , இயல்பாய் பார்க்கமுடிவதில்லை.

வெகுநேரமாகியும்
வீடு திரும்பாத
மகளைக் குறித்து
கவலைப்படாமல
இருக்க முடிவதில்லை.

பிறன் மனை
யென்றாலும்
ஆசையுறும் மனதை
அடக்க முடிவதில்லை.

சின்ன விஷயம்
தானென்றாலும்
விட்டுக்கொடுக்க
முடிவதில்லை.

சந்தேகம், சபலம்,
பயம், பதற்றம்,
கவலை, காத்திரம்,
போட்டி, பொறாமை,
வஞ்சம், வலி,
கண்ணீர், மரணம்…..

ச்சீ ! எதற்கடா
இந்த மனிதப்பிறவி.

மோகன்.ச.
Leave a Reply

%d bloggers like this: