Kaikuthal Arisi

கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..! Kaikuthal Arisi

477

கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..!

Kaikuthal Arisi benefits

நாம் இன்று சாப்பிடும் அரிசியானது செயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. இதைதான் நாம் தினமும் உணவாக சாப்பிடுகிறோம். இதனால் நமது உடலுக்கு பலவிதமான பாதிப்புகள் உண்டாவதை காண்கிறோம். கைக்குத்தல் அரிசியை கொண்டு சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவ்வளவாக உடல் பாதிப்புகள் வருவதில்லை அதனால் நமது முன்னோர்கள் அதையே சாப்பிட்டு நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இந்தப்பதிவில் கைக்குத்தல் அரிசியைப் பற்றி பார்க்க போகிறோம்.

ஊட்டச்சத்துகள்:

மற்ற அரிசியை விட நீண்ட நேரம் வேகக்கூடிய இந்த கைக்குத்தல் அரிசியில் (Kaikuthal Arisi) அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளது. இதில் உடல் எடையை குறைக்கும் நார்ச்சத்து மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் மிகுதியாக உள்ளது.

கைக்குத்தல் அரிசியின் பயன்கள்: Kaikuthal Arisiyin Payangal

நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த அரிசியை நாம் சமைத்து சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்களை நாம் பதிவில் பார்ப்போம்.

புற்றுநோயை தடுக்கிறது: Prevention of cancer

  • கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால், பெருங்குடல் புற்றுநோய் வருவதை தடுத்து, பெருங்குடலை பாதுகாக்கிறது. கைக்குத்தல் அரிசியில் செலினியம் உள்ளதால் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்ககூடிய தன்மை உள்ளது.
  • இதிலுள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் லிக்னான் மார்பக புற்று நோய் மற்றும் இதய நோய் இரண்டையும் வராமல் காத்துக் கொள்ள உதவுகிறது.

நார்ச்சத்து அதிகம்: High fiber

  • கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் மிகவிரைவில் செரிமாணம் அடைய உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல் இதய நோய் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
  • கைக்குத்தல் அரிசியில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால், கலோரி அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடல் எடை விரைவில் குறையும்.
  • இவற்றில் அதிகம் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் சாப்பிட்ட பிறகு, மிக விரைவில் உணவு செரிக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, குடல் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
  • அதிகமான நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இரண்டு வகை நீரிழிவு நோயை சீராக காத்துக்கொள்ள கைக்குத்தல் அரிசி பயனுள்ளதாக இருக்கிறது.
  • கைக்குத்தல் போன்ற கரையாத நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாகுவதை தடுக்க உதவுகிறது.

எலும்புகள் பலமாக: For strong bones

கைக்குத்தல் அரிசியில் 21% மெக்னீசியம் உள்ளதால், தினமும் கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிடுவதால் நம் எலும்புகள் மிகவும் பலமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.

ஆரோக்கியமான நரம்பு மண்டலம்: Healthy Nervous System

கைக்குத்தல் அரிசியில் மாங்கனீசு நிறைந்துள்ளது அதனால் இதை உட்கொள்ளும் போது இவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலத்தை உருவாக்கி நம் நரம்பு மண்டலத்தில் பல வகையான நரம்புகளில் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

எமது பேஸ்புக் பக்கம்

கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..!

கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..!

காட்டுயானம் அரிசியின் பயன்கள்..!

மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..!

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா?

சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..!

கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள்

பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி

சீரக சம்பா அரிசியின் பயன்கள் 

Keywords: Kaikuthal Rice Benefits




%d bloggers like this: