மருத்துவ குணம் நிறைந்த ‘கடுக்காய்’. Kadukkai benefits in Tamil!
கடுக்காய் மரம் உயரமான மலை பிரதேஷங்களில் வளரக்கூடியது. அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் உள்ள பகுதிகளில் தான் வளரும். இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட இந்த கடுக்காய் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, இலங்கையிலும் பிறகு மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பரவியது.
கெட்டியான கருப்பு பட்டைகளைக் கொண்டிருக்கும் இந்த கடுக்காய் மரமானது கிட்டதட்ட 60 அடி உயரத்திற்கு மேல் வளரும் தன்மை கொண்டது. இவ்வளவு உயரம் வளரும் இந்த மரத்தின் அடிபாகம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். கடுக்காய் மரம் குளிர் காலத்தில் இலைகளை உதிர்த்து கோடை காலத்தின் தொடக்கத்தில் துளிர் விட ஆரம்பித்து சித்திரை, வைகாசி மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். என்னங்க கடுக்காய் மரத்தைப் பற்றியே சொல்லிட்டு இருக்கீங்க என்று கேட்பது புரிகிறது.
இன்னும் கொஞ்சம் கடுக்காய் பற்றி தெரிந்து கொண்டு அதன் பயன்களுக்கு செல்வோம். கடுக்காய் பூக்கள் பச்சை நிறமும் வெண்மை நிறமும் கலந்ததாக இருக்கும். சில வகை கடுக்காய் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்து கொத்தாக பச்சை நிறத்தில் காய்க்கும். பழம்பழுத்து முற்றியபின் கருப்பும் பழுப்பு நிறம் கலந்ததாக தடித்த ஓட்டோடு இருக்கும். இதன் கொட்டையில் விஷத்தன்மை உள்ளதால் அதை பயன்படுத்தக்கூடாது. கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என்று பல வகைகள் இருக்கிறது. கடுக்காயின் மருத்துவ பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடுக்காய் சுவை
அறுசுவைகளில் இருக்கும் உவர்ப்புச் சுவையைத் தவிர மற்ற ஐந்து வகை சுவைகளான இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன.
கடுக்காய் பயன்கள்: Kadukkai benefits in Tamil
- வாய், தொண்டை, இரைப்பை மற்றும், குடலில் உள்ள புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.
- மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும்.
- காது நோய் குணப்படுத்தும்.
- புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
- அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
திரிபலா எனும் அற்புது மருந்து: Thiribala
சித்த மருத்துவத்தில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து “திரிபலா” என்ற மருந்தைத் தயார் செய்கிறார்கள். இது சர்வ நோய்களையும் தீர்க்கும் நிவாரணியாக அமைகிறது.
வாத நோய்க்கு நல்ல மருந்து: Kadukkai Payangal
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை டீஸ்பூன் பொடியைத் வாயில் போட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும். அதேபோல் கடுக்காய் தோலை லேசாக வறுத்தெடுத்து, கற்கண்டுடன் சேர்த்து லேகியம் போல செய்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக சாப்பிட்டு வந்தாலும் வாத நோய் தீரும்.
பித்தம் நீங்க கடுக்காய்: benefits of Kadukkai
கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
மூக்கில் ரத்தம் வடிதல்: Kadukkai uses
நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் சூட்டால் மூக்கிலிருந்து இரத்தம் வருகிற பிரச்சினை உள்ளவர்கள், சிறிது கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் நன்கு அதன் வாசனையை நுகர்ந்து உள்ளிழுத்து சுவாத்தீர்கள் என்றால், ஒருசில நிமிடங்களிலேயே மூக்கில் ரத்தம் வருவது நின்று விடும்.
கடுக்காயுடன் இவற்றை சேர்த்து சாப்பிடுவதால் உண்டாகும் மருத்துவ பலன்கள்: Kadukkai benefits.
- நிலவேம்பு, சுக்கு, சீந்தில் கொடி, வேப்பம் வகைக்கு 10 கிராம் எடை எடுத்து அம்மியில் வைத்து ஒரு இரண்டு ஆழாக்குத் தண்ணீர் விட கொடுத்து வந்தால் விஷக்காய்ச்சல் குணமாகும்.
- கடுக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு வகைக்கு 10 கிராம் எடை எடுத்துத் தூள் செய்து காலை, பகல், மாலையாக மூன்று வேளைக்கும் வேளைக்கு அரைத் தேக்கரண்டியளவு தூளுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
- ஒரு கடுக்காயைத் தூள் செய்து சோற்றுக் கற்றாழைச் சோற்றில் அரை ஆழாக்களவு எடுத்து அதில் இந்தத் தூனைப் போட்டு நன்றாகப் பிசைந்து, ஒரு துணியில் வைத்து வடிகட்டி அந்தச் சாற்றில் பொரித்த வெங்காரத் தூனில் ஒரு சிட்டிகையளவு போட்டு, இரண்டு கழற்சிக்காயளவு பனை வெல்லமும் சோத்து குழப்பிக் கொடுத்தால் கொஞ்ச நேரத்தில் நீர்ப்பிரியும்.
- ஆண் குறியில் ஏற்படும் ஒருவகைப் புண்ணை கொருக்குப் புண் என்று சொல்கிறார்கள். ஒரு கடுக்காயை தைத்து ஆழாக்களவுத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரைக் கொண்டு கழுவி வந்தால் கொருக்குப் புண் ஆறிவிடும்.
- கடுக்காய்த் தோல், நிலவேம்பு, சுக்கு, கடுகுரோகினி, தேவதாரு, வெப்பாலையரிசி, நெல்லிவற்றல் வகைக்கு 5 கிராம் எடை எடுத்துத் தட்டி ஒரு சட்டியில் போட்டு, இரண்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி, வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.
- கடுக்காயை உடைத்து அதன் தோலை இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு ஓயாத விக்கல் ஏற்படும் சமயம் ஒரு சிட்டிகையளவு தூளை அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழப்பிக் கொடுத்தால், விக்கல் நிற்கும்.
கடுக்காயில் உள்ள மருத்துவ பலன்களை அறிந்துதான் நம் முன்னோர்கள் அதை முறையாக பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வளவு மருத்துவ பலன்கள் உள்ள கடுக்காய் நீங்களும் பயன்படுத்தி பயனடையுங்கள்.
அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
சாமை அரிசியின் பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள் | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
தினை அரிசியின் பயன்கள் || Thinai rice | |
‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா? | |
மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..! | |
‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா? | |
‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா? |