காடை-முட்டையில்-இவ்வளவு-பயன்களா

காடை முட்டையில் இவ்வளவு பயன்களா?

142

காடை முட்டையில் இவ்வளவு பயன்களா?

காடை முட்டைகள் நமக்கு என்னென்ன பலன்களை தருகிறது. அதன் மருத்துவ பயன்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். காடை முட்டையில் இவ்வளவு பயன்களா? benefits of quail eggs

உள்ளடக்க அட்டவணை

துவக்கமாக…

காடை முட்டையிலுள்ள சத்துகள்

காடை முட்டை மருத்து குணங்கள்

புரதச் சத்து நிறைந்த உணவு

ஞாபக சக்திக்கு உகந்தது

சருமத்தின் அழகை பராமரிக்க

இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு

பார்வை குறைபாடு போக்க

கர்ப்பிணி பெண்களுக்கு

அலர்ஜி பிரச்சனையை சரி செய்ய

புற்று நோய்

வளரும் குழந்தைகளுக்கு

உடல் அசுத்தத்தை போக்கும்

இறுதியாக..


துவக்கமாக…

நாம் உண்ணும் முட்டைகளில் அதிகமான சத்துகள் இருப்பதை கேள்விபட்டும், பார்த்தும் இருக்கின்றோம். அதே வகையில்தான் இந்த காடை முட்டையும் இருக்கின்றது. காடை முட்டையில் அப்படி என்ன என்ன இருக்கிறது. அது நமக்கு எந்த வகையில் நன்மையை தருகின்றது? அதன் மருத்துவ குணங்கள் என்ன? அதை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

காடை முட்டையிலுள்ள சத்துகள்: Kaadai egg benefits in tamil

காடை முட்டையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது தெரியுமா? பொட்டாசியம், சோடியம், கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதச்சத்து, விட்டமின் ஏ, கால்சியம், விட்டமின் டி,
விட்டமின் பி, மெக்னீசியம் போன்ற சத்துகள் இருக்கின்றது. அதாவது கோழி முட்டையை விட 3 முதல் 4 மடங்கு சத்து அதிகமாக காடை முட்டையில் உள்ளது.


ஆண்களுக்கான தலை முடி பராமரிப்பு டிப்ஸ்..!

ஆரோக்கியத்தை பராமரிக்க 6 டிப்ஸ்..!


காடை முட்டையில் இவ்வளவு பயன்களா? benefits of quail eggs

புரதச் சத்து நிறைந்த உணவு:

நம் உண்ணும் உணவில் புரதச்சத்தான அவசியமானதாக இருக்கிறது. இதையே மருத்துவர்களும் ஆமோதிக்கின்றனர்.  பொதுவாக கோழி முட்டையில் புரதச் சத்து நிறைந்து காணப்படுகிறது.  அதே போல இந்த காடை முட்டையிலும் புரதச்சத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதில் அதைவிட கூடுதலாக மற்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.

அதாவது புரோட்டீன்கள், விட்டமின்கள் போன்று நம் உடலிற்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை மேலே தெரிவித்துள்ளோம். இதனால் இந்த முட்டை மருத்துவ பயன்களுக்கு அதிகமாக பயன்படுகிறது.

ஞாபக சக்திக்கு உகந்தது:

இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் ஞாபகம் சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதாவது இது மூளையின் செயல்பாட்டை தூண்டுகிறது இதனால் நமக்கு ஞாபக சக்தியை அதிகமாக வாய்ப்பாக அமைகிறது. அதே போல நமது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்து கொள்ள உதவுகிறது. ஆகையால் ஞாபக சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் வாரத்தில் ஒரு முறையாவது காடை முட்டையை உணவில் சேர்த்து கொள்வது சிறப்பு.

சருமத்தின் அழகை பராமரிக்க:

பொதுவாக முட்டையின் வெள்ளை கருவானது உடல் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பயன்படுகிறது. இதை நம்மில் அதிகமானோர் தெரிந்து வைத்திருப்போம். காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களானது நமது சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. சரும அழகை பராமரிக்க நினைப்பவர்கள் காடை முட்டையை பயன்படுத்தலாம்.

இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு:

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக் காடை முட்டை சிறந்தது. இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் காடை முட்டையைச் சாப்பிட்டு வரலாம். மேலும் காடை முட்டையைக் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவு சரியான முறையில் பராமரிக்க உதவுகிறது.

பார்வை குறைபாடு போக்க:

காடை முட்டையில் விட்டமின் சத்துகள் அதிகமாக இருப்பதை மேலே தெரிவித்திருந்தோம். குறிப்பாக இதிலுள்ள விட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. பார்வை திறனை மேம்படுத்த விட்டமின் ஏ ஒரு இன்றியமையாததாகும். சிறுவயதில் பார்வை குறைபாடுள்ள  குழந்தைகளுக்கு காடை முட்டையினை உணவில் தினமும் சேர்த்து வருவதால் குழந்தையின் பார்வை திறனை மேம்படுத்தலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு:

காடை முட்டையில் அதிக அளவு விட்டமின் டி உள்ளது. இதற்கு கால்சியத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. இது எலும்பினை பலப்படுத்த உதவுகிறது. கர்ப்ப காலத்தில் கருவில் வளரும் குழந்தையின் எலும்பினை உறுதியாக்க இந்த முட்டை உதவுகின்றது.

அலர்ஜி பிரச்சனையை சரி செய்ய:

ஓவோமுகாய்டு என்று சொல்லக்கூடிய புரோட்டீன் காடை முட்டையில் இருக்கிறது. இது உடம்பில் ஒவ்வாமை பிரச்சனை அதாவது அலர்ஜி போக்க வல்லது. காடை முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதின் மூலம் அலர்ஜி பிரச்சனைகள் குணமாகும்.

புற்று நோய்:

காடை முட்டையில் கார்சினோஜெனிக் என்னும் வேதிப் பொருள் அதிகமாக இருக்கிறது. இது புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்க பயன்படுகிறது. எனவே புற்றுநோய் வராமல் தடுக்கவும், அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் தினமும் காடை முட்டை ஒன்று சாப்பிட்டு வருவது நல்லது.

வளரும் குழந்தைகளுக்கு:

வளரும் குழந்தைகளுக்கு தினமும் காடை முட்டையை உணவில் சேர்த்து கொடுத்து வரவேண்டும். அவர்கள் தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அக்குழந்தைகளின் வளர்ச்சி மிகவும் சீரானதாக இருக்கும். குறிப்பாக நோய் தொற்றுகள் குழந்தைகளை எளிதில் அண்டாமல் பாதுகாக்கிறது.

உடல் அசுத்தத்தை போக்கும்:

காடை முட்டை உண்பதன் மூலம் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீக்கிவிடுகிறது. இன்னும் சொல்வதென்றால் பித்தப்பையில் உள்ள கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றிவிடும்.


“உருளைக்கிழங்கு” இதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!

காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!


இறுதியாக…

காடை முட்டைகள் உண்மையாகவே ஊட்டச்சத்து மிக்க பொருள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவற்றிலுள்ள வளமான வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் பலவிதமான ஆரோக்கிய நலன்களை நமக்கு தந்துதவுகிறது. இருப்பினும் நம் உடலுக்கு இது ஏற்றதா இதனால் வேறு ஏதேனும் பிரச்சனைகள் வருமா என்பதையும், அல்லது சாப்பிட்டவுடன் ஒவ்வாமை உண்டானாலும் உடனடியாக மருத்துவரை கண்டு ஆலோசனை பெற்று கொள்வது சிறந்தது.

ஆரோக்கியமான உணவை எடுத்து உடல் ஆரோக்கியத்தை பேணுவோம்.

Our Facebook Pageஇந்த தளத்தில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் இணையதளங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களே. அந்த விபரங்களையே எளிமையான வடிவில் தமிழில் உங்களுக்கு தரப்படுகிறது. சில நேரங்களில் இவற்றில் எழுத்துப்பிழைகள் இருக்கலாம். எமது kallaru.com ல் மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பதிவுகள் அனைத்தும் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே. அதை உங்கள் சொந்த முடிவில் செயல்படுத்த விரும்புகிறீர்கள். இதற்கும் எமது இணையதளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


 
Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights