jobs requirement

இயல்பு நிலைக்கு திரும்பும் வேலை வாய்ப்புகள்.

497

இயல்பு நிலைக்கு திரும்பும் வேலை வாய்ப்புகள். jobs requirement returning normaly in UAE

அமீரகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது. இதனால் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு (recruitement) செய்யவிருப்பதாக சமீபத்திய ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகள் போன்ற துறைகள் மெதுவாக மீண்டு வருகின்ற அதே வேளையில் சுகாதாரத் துறை புதிய திறமைசாலிகளுக்கான வலுவான கோரிக்கையை பதிவு செய்து வருகிறது.

bayt.com-ன் மனிதவள இயக்குனர் ஓலா ஹடாட் கூறுகையில், “கோவிட் -19 தொற்றுநோய் சந்தேகத்திற்கு இடமின்றி கடந்த ஆண்டு பல தொழில்களை கடுமையாக தாக்கியுள்ளது. ஆனால் சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் மற்றும் நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் உதவியுடன் வேலைவாய்ப்பு சந்தை படிப்படியாக புத்துயிர் பெறுகிறது.

உலகளாவிய நிபுணர்களுக்கு 2020 ஒரு சவாலான ஆண்டாக இருந்தபோதிலும், 2021 சிறந்த ஆண்டாக இருக்கும். குறிப்பாக இது ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த பலனளிக்கும். Bayt.com சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் 74 சதவீதம் பேர் அடுத்த ஆண்டில் புதியவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புகிறார்கள் என்று தெரியவந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பான்மையான நிறுவனங்கள் புதிய ஊழியர்களை (entry level staff) குறிப்பாக ஜூனியர் எக்ஸிக்யூடிவ்ஸ்களை (junior executives) பணியமர்த்தும் என்று கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, விற்பனை நிர்வாகிகள் (sales executives), வரவேற்பாளர்கள் (receptionists) மற்றும் விற்பனை மேலாளர்கள் (sales managers) போன்றோர் ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் தேடும் முக்கிய துறைகளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our facebook page

keywords: gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil, jobs, jobs requirement,




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights