HSCC நிறுவனத்தில் ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் வேலை!

345

HSCC நிறுவனத்தில் ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் வேலை!

Jobs at HSCC!

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் HSCC என்னும் மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : HSCC India Limited

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

மூத்த மேலாளர் – 03

பொது மேலாளர் – 02

கல்வித் தகுதி : B.E Civil Engineering, B.E Electrical and Electronics Engineering படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 40 முதல் 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :

மூத்த மேலாளர் : ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரையில் வழங்கப்படும்.

பொது மேலாளர் : ரூ. 90,000 முதல் ரூ.2,40,000 வரையில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.hsccltd.co.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 20.01.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Deputy General Manager (HRM), HSCC (India) Limited, E-6(A), Sector-1, Noida (U.P)-201301.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.hsccltd.co.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.




%d bloggers like this: