பெரம்பலூரில் நாளை மறுநாள் வேலை வாய்ப்பு முகாம். Job placement camp in Perambalur
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 75-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு டிரைவர், தையல் ஆகிய வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பி.இ., பி.டெக்., ஓட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஆதார் எண், சுயவிவர குறிப்பு, கல்விச்சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
keywords: Job placement camp, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம், Job placement
You must log in to post a comment.