மத்திய அரசின் என்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

472

மத்திய அரசின் என்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.

Job opportunity in NPL

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (NPL) காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி, இணை ஆராய்ச்சியாளர், மூத்த ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : National Physical Laboratory (NPL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடம் : 15

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்:

திட்ட விஞ்ஞானி – 05

இணை ஆராய்ச்சியாளர் – 01

சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் – 03

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் -06

கல்வித் தகுதி:

திட்ட விஞ்ஞானி – பி.இ, பி.டெக், எம்.எஸ்சி இணை ஆராய்ச்சியாளர் – பி.எச்டி சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் – எம்.எஸ்சி இயற்பியல் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் – எம்.எஸ்சி இயற்பியல், பிஇ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், எம்.எஸ்சி எலெக்ட்ரானிக்ஸ்,பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nplindia.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 20.01.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nplindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.




%d bloggers like this: