Jewelry theft near Valikandapuram

வாலிகண்டபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

462

வாலிகண்டபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு. Jewelry theft near Valikandapuram.

வாலிகண்டபுரம் அருகே உள்ள வல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி பெரியம்மாள் (வயது 60). நேற்று முன்தினம் இரவு பெரியம்மாள் வீட்டை பூட்டி விட்டு அதே ஊரில் வசிக்கும் தனது மகள் ராணி வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை 8 மணி அளவில் மீண்டும் தனது வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் மறைவான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெரியம்மாள் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

keywords: Jewelry theft near Valikandapuram, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: