Jewelry-money theft

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை.

486

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை.

Jewelry-money theft

வேப்பந்தட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை- பணம் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜகுமாரி(வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பக்க அறையில் குழந்தைகளுடன் படுத்து தூங்கினார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பகுதி அறையில் உள்ள பீரோவை திறந்து, அதில் இருந்த 6 பவுன் நகையையும், ரூ.3 ஆயிரத்தையும் திருடிச்சென்றனர்.

போலீசார் விசாரணை

நேற்று காலை எழுந்து வந்த ராஜகுமாரி பின் பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறந்து கிடப்பதையும் நகை, பணம் திருட்ட போய் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வி.களத்தூர் போலீசில் ராஜகுமாரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Our Facebook Page

Keywords: Jewelry-money theft




%d bloggers like this: