ஜாதிக்காயின் பயன்கள் என்ன?Jathikai uses in tamil
எதையோ தேட போய் எதார்த்தமாக இந்த ஜாதிக்காய் பற்றிய தகவல் கிடைத்தது. உடனே நம் வாசகர்களுக்காக இன்றைக்கே இந்த பதிவை போட நாடினேன். இதோ இந்த பதிவில் ஜாதிக்காயின் பயன்கள் என்ன என்பதை நமது தாய் மொழியில் உங்களுக்காக. இது முழுக்க முழுக்க இணையதளங்களில் தெரிவித்துள்ள தரவுகளின் படி உங்களுக்கு எளிமையாக தந்துள்ளேன். Jathikai Uses in Tamil.
ஜாதிக்காய் என்றால் என்ன?
இது ஒரு பொக்கிஷமான மூலிகை, இந்த பொக்கிஷத்தை பண்டு பல வியாபாரிகள் எங்கிருந்து வாங்குகிறோம்? என்று சொல்வதையே மறைத்திருக்கிறார்கள் என்பது வரலாறு. இது அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் ஒரு சேரக்கொண்டது. ஏகப்பட்ட மருத்துவ குணத்தை கொண்டது அதனால் தான் நாம் இதைப்பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம்.
எங்கே விளைகிறது?
இந்த ஜாதிக்காய் இந்தோனேசியாவில்தான் அதிகமாக விளைகிறது. அதே போல மலேஷியாவிலும் நம் இந்தியாவிலும் விளைகிறது. ஆம், நம் தமிழ்நாட்டின் ஏற்காடு, கூடலம், கொல்லிமலை போன்ற குளிர்ச்சியான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இது வளர்கிறது.
ஜாதிக்காயின் பலன்கள் என்ன? Jathikkai Uses in Tamil
இதற்கு ஜாதிக்காய் என்று பெயர் இருந்தாலும் இதன் பழத்திலிருந்து கிடைக்கும் கொட்டை ஜாதிக்காய் கிடைக்கிறது. ஜாதிக்காயின் கனிந்த சதைப் பகுதியை ஊறுகாய் செய்யலாம்.
இதன் கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சுற்றி இருக்கும் மெல்லிய தோல் பகுதியை ஜாதிபத்திரி என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல வாசனை பொருளாக உணவு பதார்த்தங்களுக்கு பயன்படுத்தபடுகிறது.
சரி சரி ஆரோக்கிய பலன்கள் எங்கே என்று நீங்கள் புலம்புவது தெரிகிறது. இனிமேல் ஜாதிக்காயின் பலன்கள் என்னென்ன? என்பதை ஒன்றொன்றாக பார்ப்போம்.
உற்சாகத்திற்கு உகந்தது:
அதிக மன உழைச்சல் மற்றும் மன அழுத்தத்தை போக்க இந்த ஜாதிக்காய் நல்ல மருந்து. இது நம் நரம்பு மண்டலத்தில் சிறப்பான வேலை செய்யவதால்
- மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கிறது.
- மனநோயை போக்குகிறது.
- மனதை உற்சாகமாக வைத்து கொள்ள உதவுகிறது.
- நினைவாற்றலைப் பெருக்க உதவுகிறது.
புற்று நோயை தடுக்கிறது:
தாய்லாந்தில் செய்த ஆய்வுகளில் இந்த ஜாதிக்காய் புற்று நோயை தடுக்க நல்ல செயலாற்றுவதாக தெரிவித்துள்ளனர். அதாவது, ரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைத்து ரத்தப் புற்றுநோயைத் தடுக்கின்றது.
வயிற்றுப் பிரச்சனை நீங்க: Jathikkai benefits in Tamil
ஜாதிக்காய் மற்றும் சுக்கு பொடி இரண்டையும் சம அளவு எடுத்து, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடியாக்கி ஆகாரத்திற்கு முன்பு மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வர, வாயுத்தொல்லை மற்றும் அஜீரண பிரச்சனை சரியாகும். மேலும், கிருமிகள் காரணமாக வயிற்றில் உண்டாகும் அத்தனை வயிற்றுப் போக்கு பிரச்சனைகளுக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்தாக இருக்கிறது.
அருகம்புல் பொடியின் மருத்துவ பயன்கள்..!
இந்த உணவுகள் உங்கள் ஆண்மையை பாதிக்கும் தெரியுமா?
பேரீச்சம்பழம் உண்பதால் உண்டாகும் பலன்கள் || Benefits of dates
ஆரோக்கியமான உறக்கத்திற்கு:
பசும்பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை கலந்து இரவில் படுக்கும்போது குடித்து வரவேண்டும். இதனால் மனஅழுத்தம் போய், நல்ல ஆரோக்கியமான தூக்கத்தைத் தரும்.
ஆண்மைக் கோலாறுகள் பிரச்சனைக்கு: Jathikkai Uses in Tamil
ஆண்களின் விந்து ஆற்றல் குறைந்து, மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதனால் உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்தாக இருக்கின்றது. தினமும் இரவு படுப்பதற்கு முன் பாதம் பருப்பு தூளை பசும்பாலில் கலந்து அதனுடன் சிறிதளவு ஜாதிக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வர நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மை நீங்கும்.
இது போன்று இன்னும் பல வகையான மருத்துவ பலன்கள் இருக்கின்றது இந்த ஜாதிக்காயில்.
- வாந்தியை நிறுத்த உதவுகிறது.
- முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
- ஜாதிக்காய் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டது.
அதிகமான ஜாதிக்காய் ஆபத்தை உண்டாக்கும்:
ஜாதிக்காய் கொஞ்சமகா உணவில் சேர்த்து எடுத்து கொள்ளலாம். ஆனால் அதிகமாக எடுத்தால் குமட்டல், வாந்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வயிற்றீல் எரிச்சல் போன்ற உபாதைகள் உண்டாகி மயக்கத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்பதாக அறியப்படுகிறது. தினசரி 120 mg அல்லது அதற்கு மேல் தொடர்ச்சியாக பயன்படுத்துவது பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
ஆகையால் இதனால் அறிவிப்பது என்ன வென்றால்…
நீங்கள் ஜாதிக்காய் எடுப்பதாக இருந்தால் மருத்துவரை அணுகி உரிய ஆலோசையின் பெயரில் எடுக்கலாம்.
Key Words: Jathikkai benefits in Tamil, Jathikkai Palangal
Amazon - ல் மாப்பிள்ளை சம்பா வாங்க | |
Amazon - ல் கருங்குருவை வாங்க | |
Amazon - ல் கருப்பு கவுனி வாங்க | |
Amazon - ல் சிவப்பரிசி வாங்க | |
Amazon - ல் காட்டுயானம் வாங்க |