Is-watermelon-good-for-diabetics
நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி உகந்ததா? ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துகள் என்ன என்பதை இந்த பதவில் பார்ப்போம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி! Watermelon
தர்பூசணி அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட பழமாகும். கிளைசெமிக் அதிகமாக இருப்பதால் இதிலுள்ள கார்போஹைட்ரேட்டுகள் மிக விரைவாக உடைக்கப்படுகின்றன. இது ஆற்றல் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பை ஏற்படுத்தும்-இவை இரண்டும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் உண்டாகதவாறு சிறிய அளவில் தர்பூசணி பழத்தை சாப்பிடலாம்.
கரோலினா காஸ்ட்ரோ
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த இவர் சுகாதார சேவைகள் துறையில் PhDயும், முதுகலையில் செயல்பாட்டு மருத்துவ ஊட்டச்சத்து, இளங்கலையில் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை படித்து பட்டம் பெற்றுள்ளார். இவர் இத்துறையில் · 7 வருட அனுபவம் கொண்டவர். இவர் தமது கருத்தை இவ்வாறு கூறியுள்ளார்.
குறைந்த அளவில் தர்பூசணியை எடுத்து கொள்வதையே நீரிழிவு நோயாளிகளுக்கு நான் பரிந்துரைப்பேன். இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகமாகவும் உள்ளன. இது கண் ஆரோக்கியத்திற்கு அவசியமானது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
ஐசிஸ் லிமா சோசா
ஊட்டச்சத்து இளங்கலை · 11 வருட அனுபவம் கொண்ட பிரேசில் நாட்டை சார்ந்த இவரும் மேற்சொன்ன விசயத்தையே கூறியுள்ளார். அதாவது, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், ஒரு சிறிய அளவு தர்பூசணி எடுத்து கொள்வது உங்களின் சீரான உணவுத் திட்டத்திற்கு உகந்ததாக இருக்கும்.
Disclaimer: இது பொதுவான தகவல்களே, இவை கல்லாறு மீடியாவின் கருத்தாகக் கருதப்படக்கூடாது. ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவ ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.
இதையும் படிக்கலாம்: