head itchy

தலை அரிச்சிக்கிட்டே இருக்குதா?

3006

தலை அரிச்சிக்கிட்டே இருக்கின்றதா? அப்போ அதுக்கு என்ன காரணமா இருக்கும் என்று தெரிந்து கொள்வோமா? Is the head itchy?

கூந்தல் அரிப்பு மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்று. சிலருக்கு தலையில் கைவைத்தால் மீண்டும் வெளியே எடுக்க முடியாத அளவுக்கு அரிப்பு இருக்கும்.

கூந்தல் அரிப்பு.

தொடர்ச்சியான அரிப்பு இருந்தால் அது தரும் அவஸ்தையை அனுபவித்தால் தான் தெரியும் என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். நமைச்சல் உச்சந்தலையில் ஸ்கால்ப் பகுதியில் சருமத்தை மெல்லியதாக உதிர செய்யகூடும். தலையை சொரியும் போது செதில் செதிலாக உதிர்வு இருக்கும். இது வேதனையான வலியையும் தரக்கூடும். இவை தீவிரமாகும் போது மருத்துவரின் சிகிச்சையும் அவசியம்.இது ஏன் உண்டாகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
​உச்சந்தலையில் அரிப்பு

அரிப்பு அதிகமாக இருக்கும் போது தொடக்கத்திலேயே வீட்டு வைத்தியம் மூலம் சரிசெய்ய முடியும். இது தீவிரமாகும் போது உச்சந்தலையில் அரிப்பு அதிகரிக்கிறது. இது ப்ரூடிட்டஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உச்சந்தலை நமைச்சலுக்கு பல காரணங்கள் உண்டு.

இது பொடுகு பிரச்சனை தொடங்கி செபொர்ஹெக் டெர்மடிடிஸ் வரை தீவிர பிரச்சனையாக மாற கூடும். உங்களுக்கு அரிப்பு பிரச்சனை இருந்தால் முதலில் என்ன காரணங்கள் என்பதை கண்டறியுங்கள் அப்போதுதான் அதற்கான சிகிச்சை முறையையும் சரியாக தேர்வு செய்யப்படும்.

Is the head itchy?

​காரணங்கள்:

தலை அரிப்பு காரணம் -1

சுத்தமில்லாத கூந்தலால் தலையில் அழுக்கு தேங்கி பொடுகு உண்டாவது. பொடுகு எப்போதும் தலையில் இருக்க கூடியதுதான். ஆனால் அதை சரிசெய்ய முயற்சிக்காமல் இருக்கும் போது பொடுகு உதிர்ந்து செதில் செதிலாக உதிரக்கூடும். முதலில் பழுப்பு நிறத்தில் வெளிவரக்கூடிய செதில் நாளடைவில் வெள்ளையாக உதிர்ந்து வெளிவரக்கூடும்.பிறகு படிப்படியாக ஆடைகளில் விழத்தொடங்கும்.

தலை அரிப்பு காரணம் -2

பொடுகு உண்டாக மலாசீசியா எஸ்பிபி என்னும் நுண்னுயிரிகளால் பொடுகு உண்டாகிறது. உச்சந்தலையில் எண்ணெய் சுரப்பிகள் உள்ளது. எண்ணெய் சீபம் மயிர்க்கால்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த நுண்ணுயிர்கள் கூந்தலில் மட்டும் அல்லாமல் சருமத்தோடும் இணைந்து பாதிப்பை உண்டாக்குகிறது.

தலை அரிப்பு காரணம் -3

இது உச்சந்தலையில் வறட்சி அல்லதுஎரிச்சலை உண்டு செய்துவிடும். இந்த அரிப்பு செய்வதால் தோல் பல செல்களை இழந்து உச்சந்தலையில் செதில்களாக உருவாகி கொட்டுகிறது.

தலை அரிப்பு காரணம் -4

​செபொர்ஹெக் டெர்மடிடிஸ்: இது நாள்பட்ட அழற்சி தோல்நிலை ஆகும். செபேசியஸ் சுரப்பிகள் அதிகமாக இருந்தால் செதில் உதிரும் போது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த நிலையில் தலையில் அரிப்பானது கடுமையான வீக்கத்தையும் சந்திக்க நேரிடும். இது ஊட்டச்சத்துகள் பற்றாகுறை,அடிக்கடி உணர்ச்சிவயப்படுவது, மன அழுத்தம்ம் நோயெதிர்ப்பு மண்டலத்தில் மாற்றங்கள் இவையெல்லாம் இந்த செபொர்ஹெக் டெர்மடிடிஸ்க்கு காரணமாக இருக்கலாம்.

தலை அரிப்பு காரணம் -5

மலாசிசியா சருமத்தை பாதிக்கும் போது இது நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்களை உண்டாக்குகிறது. இது உச்சந்தலையில் ஊடுருவி மஞ்சள் அடுக்கை உண்டாக்குகிறது. இது எரிச்சல் மற்றும் வீக்கத்தை உண்டு செய்கிறது.

தலை அரிப்பு காரணம் -6

தலைபேன்கள்: இது பொதுவாக எல்லோரையும் பாதிக்கலாம். தலையில் பேன்கள் வந்தாலே அது கூந்தல் ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கும். பேன்கள் சாம்பல், பழுப்பு நிறத்தில் உச்சந்தலையில் உயிர்வாழும். இதன் முட்டைகள் நிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

தலை அரிப்பு காரணம் -7

தலைமுடி சுத்தமாக நீளமாக குறுகியதாக இருந்தால் தலைபேன்கள் கொண்டிருக்கலாம். இது உச்சந்தலையில் இருக்கும் ரத்தத்தை உறிஞ்சு எடுக்கிறது. பேன் கடிக்கும் போது உச்சந்தலையில் அரிப்பு உண்டாகலாம்.

தலை அரிப்பு காரணம் -8

சொரியாசிஸ்: நாள்பட்ட தோல் அழற்சி இருந்தால் உச்சந்தலையில் சிவப்பு நிறமோ செதில் செதிலாகவொ உதிரக்கூடும். இது மெல்லிய தோலை செதில்களாகவே மாற்றும். முழு உச்சந்தலையில் இது செயல்படும்.

தலை அரிப்பு காரணம் -9

உச்சந்தலையை தொடர்ந்து நெற்றி, கழுத்தின் பின்புறம், காதுகளுக்கு பின்னால் தடிப்பு தோல் அழற்சி உண்டாக கூடும். உச்சந்தலையில் அரிப்பு புடைப்புகள் உண்டாகலாம்.

தலை அரிப்பு காரணம் -10

நமைச்சல்: உச்சந்தலையில் அரிப்பு இருக்கு போது தீவிரமாக சொரிவதுண்டு. அப்போது நமைச்சல் சாத்தியமாகலாம். இது முடியின் வேர்க்கால்களை மட்டுப்படுத்தி முடி உதிர்வை ஊக்குவிக்கும். உச்சந்தலையில் கோளாறுகள் உண்டு. இதன் காரணமாக முடி உதிர்தலும் உண்டாக கூடும். சொரியாசிஸ் ஃபொலிகுலிடிஸ் மற்றும் ஹைப்போதைராய்டிசம் போன்றவற்றாலும் உச்சந்தலையில் அரிப்பு, முடி உதிர்தல் தோல் கோளாறுகள் உண்டாகலாம்.

தலை அரிப்பை எப்படி சரி செய்யலாம்!

தலை அரிப்பை போக்குவதற்கான வழிகள் பல உள்ளன. அவற்றை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

head itchy - lemon

தலை அரிப்பு போக்க வழி -1

எலுமிச்சை சாறு: எலுமிச்சையில் ஆன்டிசெப்டிக் தன்மை அதிகமாக உள்ளது. அதனால் தலையில் ஏற்படும் அரிப்பை போக்க இது பெரிதும் உதவுகிறது. பொடுகு தொந்தரவை குறைக்கவும் எலுமிச்சை அதிகமாக பயன்படுகிறது.

புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறை எடுத்து உச்சந்தலையில் தடவவும். 5 நிமிடங்கள் கழித்து தலைக்கு ஷாம்பு போட்டு அலசவும். பொடுகு இல்லாமல் அரிப்பு ஏற்படும்போது, எலுமிச்சை சாறை நீரில் கலந்து தலையை அலசலாம்.

மற்றொரு முறை, எலுமிச்சை சாறுடன் தயிர் சேர்த்து தலையில் மென்மையாக தடவவும். 5 நிமிடங்கள் ஊறியவுடன், மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். தலைமுடியில் வறட்சி மற்றும் அரிப்பு குறையும் வரை இதனை தொடர்ந்து செய்யவும்.

தலை அரிப்பு போக்க வழி -2

பேக்கிங் சோடா: இதனை கொண்டு தலையில் உள்ள பூஞ்சை தொற்றை போக்கி அரிப்பை போக்கலாம். பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து தலையில் தடவவும். சிறந்த தீர்வுக்கு, பேக்கிங் சோடாவை தலையில் தடவுவதற்கு முன், சிறிது ஆலிவ் எண்ணெய்யை தலை முழுதும் தடவி கொள்ளவும். பேக்கிங் சோடா பேஸ்டை தடவி 10-15 நிமிடங்கள் கழித்து தலையை நீரால் அலசவும்.

head itchy - aloe-vera

தலை அரிப்பு போக்க வழி -3

கற்றாழை: கற்றாழை ஜெல்லிற்கு ஈரப்பதத்தை கொடுக்கும் தன்மை உண்டு. தலையில் இருக்கும் அதிகமான வறட்சியை குறைத்து ஈரப்பதத்தை தந்து அரிப்பை கட்டுப்படுத்துகிறது. வீட்டில் கற்றாழை ஜெல்லை தயாரிக்க முடியாவிடில், கடையில் வாங்கி பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லை விரல்களில் தடவி, தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின், மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

head itchy - coconut oil

தலை அரிப்பு போக்க வழி -4

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் தலையை ஈரப்பதத்தோடு வைப்பதால் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. தலையில் தேங்காய் எண்ணெய்யை தடவவும். 1 மணி நேரம் கழித்து நறுமண பொருள் சேர்க்காத ஷாம்பு கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு 3 முறை இந்த எளிய முறையை பின்பற்றலாம்.

தேங்காய் எண்ணையை சூடாக்கி, அதனை தலையில் தடவி பிறகு ஷாம்பூவால் தலையை அலசலாம்.

Our facebook page

Keywords: Is the head itchy? தலை அரிப்பு, health tips, beauty tips,




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights