கரண்ட் பில்ல பார்த்தா சாக்கடிக்குதா? அப்போ நீங்க இதை ட்ரை பண்ணிபாருங்க..! Is the current bill getting higher?
எப்போ?, எப்படி? கரண்ட் வரும்னு சொல்ல முடியாது, ஆனா சரியான நேரத்திற்கு கரண்ட் பில் கரெக்டா வந்திடும். என்ன ரொம்ப மொக்கையா இருக்கிறதா? வெயில் காலத்தில்தான் கரெண்ட்பில் அதிகமா வருமுன்னா குளிர்காலத்திலும் கரெண்ட் பில் தாறுமாறா வருது என்று சிலர் புலம்புவதைப் பார்த்திருப்போம். வெயில் காலமானாலும் குளிர் காலமானாலும் கரண்ட் பில்லை பார்த்தால் கொஞ்சம் சாக்கடிக்கத்தான் செய்கிறது. மின்சாரம் கட்டணத்தைக் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மின்விளக்குகள்: Lights
வீட்டின் அறைகளில் நாம் இல்லாத நேரத்திலும் விளக்கு, பேன் போட்டுவிட்டே மற்ற வேலைகளில் ஈடுபடுவோம். அதனால் என்ன பெரிய பில் வந்துவிடப்போகிறது என்று நினைப்போம். குறிப்பிட்ட யூனிட்களுக்கு மேல் போனால் கட்டண விகிதம் மாறி அதிகமாகக் கட்ட வேண்டி வருமே. அதனால் ஒவ்வொரு யூனிட்டையும் பார்த்து பார்த்துத்தான் செலவு செய்யவேண்டும். அனாவசியமாக வீட்டில் விளக்கு அல்லது பேன் எரிகிறதா என்பதை ஒரு தடவைக்கு இரு தடவை பார்த்து ஆப் செய்வது சிறந்தது.
பிளக்குகள்: Plugs
நாம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாதன பொருட்கள் அணைக்கப்பட்டு இருந்தாலும், நாம் செருகி இருக்கும் பிளக்குகளையும் எடுத்து விடுவது நல்லது. சுவிட்சுகள் அணைக்கப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட அளவு மின்சாரம் இச்சமயங்களில் விரயமாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர். சுவிட்சை அணைத்து விட்டு பிளக்குகளையும் எடுத்துவிட வேண்டும்.
வாட்டர் ஹீட்டர்: Water Heater
குளிர்காலத்தில் குளிக்கிற கஷ்டம் இருக்கிறதே அதுவும் பச்சைத்தண்ணீரில் குளிக்கனும்னா ரொம்ப கஷ்டம். அந்த சமயத்தில் கொஞ்சம் இதமா சுடுதண்ணீர் இருந்தா நல்லா இருக்கும். அதற்காகவே வாட்டர் ஹீட்டர் வீட்டில் போட்டு வைக்கிறோம். அதில் ஒன்றும் தப்பே இல்லை. ஆனால் தண்ணீரை நல்ல சூடாக்கி எடுத்து அந்த சூட்டைத் தணிக்கக் குளிர்ந்த தண்ணீரை ஊற்றுகின்றோம். இதன் காரணமாக வாட்டர் ஹீட்டரில் தண்ணீரின் அளவும் அதிகரித்து மின்சாரத்தின் அளவும் கூடுகிறது. மிதமான சூட்டில் நீரைப் பயன்படுத்திக் குறைவான மின்சாரத்தைச் செலவு செய்யலாம்.
பேன்: Fan Using
சிலபேர் போர்வையைப் போர்த்திக் கொண்டே தூங்குவார்கள் அதே நேரத்தில் பேனையும் முழுவதுமாக இயங்க விட்டுத் தூங்குவார்கள். ரொம்பவும் குளிர் என்றால் பேனை ஆப் செய்து விட்டுத் தூங்கலாம். இதனால் மின்சார செலவுகள் குறையும்.
தண்ணீர் சிக்கனம்: Use water sparingly
வீட்டில் தண்ணீரை அனாவசியத்திற்குச் செலவு செய்வது. பிறகு தண்ணீர் டேங்கில் தண்ணீர் ஏற்றுவது. தண்ணீர் ஏற்றுவதற்கு மோட்டார் உபயோகிக்கும் போது மின்சாரச் செலவு கூடுதலாக வரும். ஆகையால் தேவையானதற்கு மட்டும் சிக்கனமாகத் தண்ணீரைச் செலவு செய்வதன் மூலம் கூட மின்சார செலவைக் குறைக்கலாம்.
என்ன இனிமேல் இது மாதிரியான சிறு சிறு விசயத்தைச் செய்து பாருங்கள். கரண்ட்பில் குறைந்து வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்! பலன் கண்டிப்பாகக் கிடைக்கும்.
Keywords: current bill, Electricity Bill, Use water sparingly