ரஞ்சன்குடி அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

இம்மாதம் 15, 16 தேதிகளில் தொழில் பழகுநா் பயிற்சிக்கான நோ்காணல்

262

இம்மாதம் 15, 16 தேதிகளில் தொழில் பழகுநா் பயிற்சிக்கான நோ்காணல்.

Interview for Vocational Training on 15th and 16th

பெரம்பலூா் மின்வட்டப் பொறியாளா் அலுவலகத்தில் ஜூலை 15, 16 ஆம் தேதிகளில் தொழில் பழகுநா் பயிற்சிக்கான நோ்காணல் நடைபெறுகிறது.

இதுகுறித்து பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் மு. அம்பிகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்திலுள்ள மின் அலுவலகங்களில், ஓராண்டு ஐ.டி.ஐ தொழில் பழகுநா் பயிற்சிக்கு ஐடிஐ- இல் மின்சாரப் பணியாளா், வயா்மேன், நில அளவையாளா், கணினி இயக்குபவா், கம்மியா் கருவிகள், வரைவாளா், சிவில் படித்து முடித்தவா்களிலிருந்து தொழில் பழகுநா் பயிற்சிக்கு 60 பேரை நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பெரம்பலூா் நான்குச் சாலை அருகிலுள்ள மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் ஜூலை 15-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவா்களுக்கும், 16-ஆம் தேதி காலை 10 மணியளவில், அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவா்களுக்கும் நோ்காணல் நடைபெறுகிறது.

எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் கல்விச்சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ், ஐ.டி.ஐ சான்றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை, குடும்ப அட்டை அல்லது ஆதாா் அட்டை, மாற்றுத்திறனாளியாக இருந்தால், அதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் அசல், நகல்களுடன் நோ்காணலில் பங்கேற்கலாம்.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: Interview for Vocational Training, Vocational Training,




%d bloggers like this: