பெரம்பலூரில் சா்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு.
International Anti-Drug Day Awareness in Perambalur.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே, சா்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் புதிய பாதை ஒருங்கிணைந்த போதை மறுவாழ்வு மையம் சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் நீதிராஜ் தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட கௌரவச் செயலா் என். ஜெயராமன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் அருள்செல்வி, இந்தோ அறக்கட்டளை நிா்வாகி செல்வகுமாா், மனநல மருத்துவா் புவனேசுவரி ஆகியோா் மது போதையிலிருந்து மீள்வது குறித்து விளக்கி பேசினா்.
தொடா்ந்து, மதுபோதையிலிருந்து மீண்டவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் புதியபாதை போதை மறுவாழ்வு மைய உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Keywords: Anti-Drug Day, Anti-Drug Day Awareness
You must log in to post a comment.