இந்துப்பை பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள்…! induppu benefits tamil
“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி நம் சொல் வழக்கில் உண்டு. உணவுக்கு உப்பு மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதே நாம் சமைக்கும் உணவில் உப்பின் அளவு சிறிதளவு கூடினாலோ அந்த உணவுப் பொருளின் ருசியானது மாறுவதோடு மட்டுமல்லாமல் உண்பதற்கு உகந்த உணவாகவும் இருக்காது. ஆகையால் உணவில் உப்பை அளவோடு பயன்படுத்த வேண்டும்.
நாம் இன்று பயன்படுத்தும் உப்பில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு நம்மில் பெரும்பாலானவர்களின் பதில் தெரியாது என்பதாகத்தான் இருக்கும். அவ்வளவு ரசாயனங்கள் அதில் கலக்கப்படுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இந்து உப்பில் ரசாயனங்கள் ஏதும் கலக்கப்படுவதில்லை. இந்த இந்துப்பை உணவிற்குத் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
இந்த பதிவில் இந்து உப்பு பற்றிப் பார்க்கப்போகிறோம். இந்து உப்பு என்றால் என்ன? இந்து உப்பு என்பது ஒருவிதமான பாறையிலிருந்து எடுக்கப்படும் உப்பு. பஞ்சாப், ஹரியானா, பகுதிகளிலும், இமயமலை பகுதிகளில் இந்த உப்பானது மலைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பானது வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் காணப்படுகின்றது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.
இந்து உப்பின் சத்துக்கள்: induppu benefits tamil
சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே இந்து உப்பில் அயோடின் சத்து, பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் இருக்கின்றது. இவை பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு தண்ணீரிலும், இளநீரிலும் ஊற வைத்த பின்னரே இயற்கையாக விற்பனைக்கு வருகிறது.
இந்துப்பின் பயன்கள் – induppu benefits
பசியைத் தூண்டுகிறது: Stimulates appetite
இந்துப்பானது குளிர்ச்சி தன்மை உடையதாக இருப்பதால் இந்த உப்பினை நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம் பசியைத் தூண்டுகிறது. எளிதில் செரிமானமாகும் திறன் உள்ளது. மலம் கழிப்பதில் கடினம் இருந்தால் அதனைச் சரி படுத்துகிறது. நம் வயிற்றில் உள்ள குடல் உணவை நன்றாக உறிஞ்சி சத்துக்களை நம் உடலுக்கு அளிக்கின்றது.
மூல வியாதிக்கு: Good for hemorrhoids
மூல வியாதிகள் நீங்க இந்துப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
வாய் துர்நாற்றம்: Mouth odor
இளஞ்சூடான வெந்நீருடன் இந்துப்பை கலந்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் பல் வலி ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். நாக்கின் ருசி தன்மையை அதிகப்படுத்தும்.
தோல் சுருக்கம்:
நம் குளிக்கும் நீரில் உப்பைப் போட்டுக் குளித்து வர நம் உடம்பிற்குத் தேவையான இரும்புச் சத்தை தருகிறது. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
நிம்மதியான உறக்கம்: Restful sleep
ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது. இதனால் நமக்கு நிம்மதியான உறக்கம் கிடைப்பதுடன் தைராய்டு பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இன்னும் பிற பயன்கள்: Induppu Payangal
- தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
- மூக்கு, காது, ஆஸ்துமா பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துகிறது.
- நெஞ்சு எரிச்சலை ஏற்படாமல் தடுக்கிறது.
வேறு பயன்பாடுகளுக்கும் இந்துப்பு பயன்படுகிறது!
- ஆயுர்வேதத்தில் ஹிங்குவசாதி என்னும் சூரண மருந்தில் இந்து உப்பானது சேர்க்கப்படுகிறது.
- கந்தர்வஹஸ்தாதி எனும் கசாயத்தில் இந்து உப்பும், வெல்லமும் ஒரு சிட்டிகை சேர்த்துக் குடிப்பதால் நாக்கில் ருசி இல்லாமல் போகும் தன்மையும், குடல் வாய்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது.
- சிரிவில்வாதி எனும் கஷாயம் வெளி மூலம் மற்றும் உள் மூல பிரச்சினைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கசாயமும் இந்து உப்பு சேர்த்து வழங்கப்படுகிறது.
- வைஷ்வானரம் என்னும் சூரணத்தையும் இந்துப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
- இந்து உப்பினால் நம் கண்களுக்கு அதிக பலன் இருப்பதால் பல ஆயுர்வேத கண் சொட்டு மருந்துகளில் இந்து உப்பு சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது.
அதிக பயனுள்ள இந்துப்பை பயன்படுத்திப் பாருங்கள். நல்ல மாற்றம் தெரியும்.
You must log in to post a comment.