IndiGo Special New Flights to Tamil Nadu
இந்தியாவின் பிரபலமான பட்ஜெட் விமான நிறுவனம் இண்டிகோ, அடுத்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு கூடுதல் மூன்று விமான சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதில், இரண்டு விமான சேவைகள் தமிழகத்திற்கு இயக்கப்படும் என்பதால், அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு குறைந்த செலவில் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
ஆகஸ்ட் முதல் அபுதாபி மற்றும் தென்னிந்திய நகரங்களான மங்களூரு, கோயம்புத்தூர், மற்றும் திருச்சிராப்பள்ளி இடையே நேரடி விமான சேவைகளை இண்டிகோ தொடங்குகிறது. அபுதாபியிலிருந்து மங்களூரு வழித்தடத்தில் உள்ள விமானங்கள் ஆகஸ்ட் 9 முதல் தினமும் இயக்கப்படுகின்றன. இதே போல், திருச்சிக்கு வாரத்திற்கு நான்கு முறை ஆகஸ்ட் 11, 2024 முதல் இயக்கப்படும். கோயம்புத்தூர் மற்றும் அபுதாபி இடையே வாரத்திற்கு மூன்று முறை ஆகஸ்ட் 10 முதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
விமான நிறுவனம் தெரிவித்துள்ளதின் படி, அபுதாபியிலிருந்து கோயம்புத்தூர் மற்றும் திருச்சிக்கு ஒரு வழி விமானக் கட்டணம் 330 திர்ஹம்ஸ் (7,500 ரூபாய்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அமீரகத்துக்கு திரும்பும்வாரம் 843 திர்ஹம்ஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். 3.7 மில்லியன் இந்தியர்கள் அங்கே வசிக்கின்றனர். இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையேயான விமானப் பாதை மிகவும் பரபரப்பாகும். இந்த பயணத் தேவையினால், விமானக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கோடை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு டிக்கெட் விலைகள் இரட்டிப்பு ஆகும். இதனால், பயணத் துறை நிர்வாகிகள் அரசாங்கங்களுக்கு இருக்கை திறனை அதிகரிக்க அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் கூடுதல் விமான சேவைகளை அறிவித்துள்ளது.
இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா, “இந்த சேவைகளுடன், இண்டிகோ இந்தியாவில் உள்ள 13 நகரங்களில் இருந்து அபுதாபிக்கு வாரத்திற்கு 89 விமானங்களை இயக்குகிறது. மலிவான விலையில் பயண அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்று கூறியுள்ளார். ஜனவரியில், இண்டிகோ தனது அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் எரிபொருள் கட்டணத்தை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
Kewords: IndiGo Special New Flights, Gulf Tamil News, GCC Tamil News, Kuwait Tamil news
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
கேரள குடும்பம் குவைத் தீவிபத்தில் பரிதாப மரணம்
துபாய் முனிசிபாலிட்டி: கார் சுத்தம் செய்ய தவறினால் அபராதம்
அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி புதுப்பிப்பு முக்கியத்துவம்
துபாய் முனிசிபாலிட்டி: கார் சுத்தம் செய்ய தவறினால் அபராதம்