Indian Embassy Name Used in E-mail Scam: Public Alert
UAE: இந்திய தூதரகத்தின் பெயரில் போலியான இ-மெயில் அனுப்பி மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 36 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். மேலும் வேலைவாய்ப்புக்காக விசிட் விசாவில் பலர் அமீரகத்திற்கு வருகின்றனர். இவ்வாறு வேலை தேடி வரும் இளைஞர்களையும், பொதுமக்களையும் குறிவைத்து, சிலர் இந்திய தூதரகத்தின் பெயரில் போலியான இ-மெயில்களை உருவாக்கியுள்ளனர். இந்த போலியான இ-மெயில் முகவரி [email protected] ஆகும். இந்த முகவரியில் இருந்து, வேலை தேடி வருபவர்களுக்கு உதவி செய்வது போல் தகவல்களை அனுப்புகின்றனர். அதற்காக அவர்களிடம் சேவை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனை உண்மை என நம்பி, பலர் பணம் செலுத்தியுள்ளனர்.
மேலும், வேலை செய்யும் நிறுவனங்களில் சம்பளம் வழங்கப்படாமல் இருப்பவர்களிடம், அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு உதவுவதாகக் கூறி இ-மெயில் அனுப்புகின்றனர். இதனை நம்பி, பலர் ஏமாற்றமடைந்துள்ளனர். இது தொடர்பாக, இந்திய தூதரகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்திய தூதரகத்தின் இ-மெயில் முகவரிகள், ‘எக்ஸ்’, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் https://indembassyuae.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது. தூதரகத்தின் இ-மெயில்கள் அனைத்தும் @mea.gov.in என்ற டொமைனில் முடிவடையும். எனவே, தூதரகத்தில் இருந்து யாராவது இ-மெயில் அனுப்பும் போது, அதில் சந்தேகம் இருந்தால், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று சரிபார்க்கலாம். இதன் மூலம் பொதுமக்கள் ஏமாறுவதை தவிர்க்க முடியும்.
மேலும், இந்திய தூதரகத்தில் இருந்து இ-மெயில் அனுப்பியதாக யாராவது தெரிவித்தால், அது தொடர்பாக தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். போலியான இ-மெயில்களை பயன்படுத்தி ஏமாற்றி வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Keywords: E-mail Scam, Gulf Tamil News, UAE Tamil News, GCC Tamil News, Gulf News Tamil
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
அபுதாபியில் இந்திய மருத்துவரின் பெயரில் சாலைக்கு பெயர்
துபாய்: புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற உத்தரவு
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?
துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்