Indefinite strike

பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்.

388

பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்.

Indefinite strike by revenue officials in Perambalur district.

தமிழகத்தில் வருவாய்த்துறையின் கீழ் உள்ள அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியினை வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கி அரசு ஆணையிட வேண்டும்.

வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். பட்டதாரிஅல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து உடனே தீர்வு காண வேண்டும். ஜாக்டோ-ஜியோ பாதிப்புகளை உடனே சரி செய்திட வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் விடுப்புகள் உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

வெறிச்சோடியஅலுவலகங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த 141 பேர் பணிபுரிகின்றனர். அதில் ஏற்கனவே 4 பேர் தற்செயல் விடுப்பில் உள்ளனர். நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி 77 பேர் பணிக்கு வராமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

அலுவலர்கள் பணிக்கு வராததால் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய 4 தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், தாலுகா அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அந்த அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஏற்கனவே 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசே வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த மாதம்27-ந்தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம், Indefinite strike




%d bloggers like this: