ADVERTISEMENT
Important travel advice for visitors to the UAE on a visit visa!

விசிட் விசாவில் வருவபவர்களுக்கு முக்கிய பயண ஆலோசனை!

Important travel advice for visitors to the UAE on a visit visa!

விசிட்டில் அமீரகம் வரும் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் முக்கிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து விசிட் விசாவில் UAE-க்கு (ஐக்கிய அரபு அமீரகம்) வரும் பயணிகளுக்காக ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா போன்ற இந்திய விமான நிறுவனங்கள் முக்கிய பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.

இந்தியா மற்றும் அமீரகத்தில் உள்ள பயண முகவர்களுக்கு இந்த விமான நிறுவனங்கள் வழங்கிய அறிவுரையில், பயணிகள் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கியமாக, பாஸ்போர்ட், திரும்புவதற்கான டிக்கெட், தங்குமிட விவரங்கள் மற்றும் நிதி ஆதாரம் போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. மேலும், பாஸ்போர்ட் நுழைவுத் தேதியிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், உறுதி செய்யப்பட்ட ரிட்டர்ன் டிக்கெட், ஹோட்டல் முன்பதிவுக்கான சான்று, 1 மாத விசாவிற்கு 3,000 திர்ஹம்ஸ் மற்றும் நீண்ட காலம் தங்குவதற்கு 5,000 திர்ஹம்ஸ் வரையிலான நிதிச் சான்றுகள் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்களின் கூடுதல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அந்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் பயணிகளுக்கு அதேபோல பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளது. தேவையான ஆவணங்கள் இல்லாமல் பயணித்தால் அமீரகத்திலிருந்து உடனடியாக திரும்பும் சூழலுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுபோல், தேவையான ஆவணங்கள் இல்லாத பயணிகளுக்கு புறப்படும் விமான நிலையத்தில் விமானங்களில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்படும் என்றும், அதற்கான கட்டணங்கள் டிக்கெட் ஏஜென்சியின் கணக்கில் பற்று வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

விமான நிலையங்களில் செக்-இன் கவுன்டர்களில் அதிகாரிகள் பயணிகளின் ஆவணங்களை சரிபார்க்கின்றனர். போதிய ஆவணங்கள் இல்லாத பயணிகளுக்கு நுழைவு மறுக்கப்படும், அந்நிலையிலில் விமான நிறுவனம் அவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு ஏற்படும் என்பதால், போர்டிங் பாஸ் வழங்குவதற்கு முன் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று பயண முகவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவுரையைத் தொடர்ந்து, பயண நிறுவனங்கள் UAE-க்கு செல்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், தேவையான அனைத்து ஆவணங்களும் பயணிகளிடம் இருப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

வளைகுடா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பக்கங்களில் இணைந்து கொள்ளுங்கள்.

Keywords: travel advice, today tamil news, gulf news tamil, tamil gulf news, dubai news tamil, gcc tamil news

Our Facebook Page

ALSO READ:
துபாய்: இந்த ஆண்டில் இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் விபத்துகளில் 4 பேர் பலி
ஹஜ்ஜின் போது கடும் வெப்பத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் மரணம்.
பரபரப்புடன் காணப்படும் துபாய் விமான நிலையம்.
ஈத் அல் அதாவை முன்னிட்டு சிறைக் கைதிகள் விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *