Iftar tents

துபாயில் இப்தார் டெண்ட்களுக்கான அனுமதி ரத்து

395

துபாயில் இப்தார் டெண்ட்களுக்கான அனுமதி ரத்து. Iftar tents permission canceled.

துபாய்: வரும் ஏப்ரல் மாதத்தில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் துவங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் காலங்களில் நோன்பு திறப்பதற்கு மசூதிகள் மற்றும் பொதுவான ஸ்தலங்களில் டெண்ட்டுகள் அமைப்பது வழக்கமாக இருந்து வந்தது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு இஃப்தார் டெண்டுகள் அமைப்பதற்கு துபாய் அரசு தடை விதித்துள்ளது.

இது சம்பந்தமாக துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரம் மற்றும் தொண்டு செயல்பாட்டுத்துறை துபாய் முழுவதும் இஃப்தார் டெண்ட்களுக்கான உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பல்வேறு மக்களை ஒன்று கூட அனுமதிப்பதன் மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கு காரணமாக அமைய வாய்ப்புள்ளதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

Our facebook page

Keywords: gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil, Iftar Tents




%d bloggers like this: