ஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா?

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி..! Hyderabad Chicken Briyani

1544

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்து சாப்பிட விருப்பமா? Hyderabad Chicken Briyani

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி என்றாலே அசைவப் பிரியர்களுக்கு நாவில் எச்சில் ஊரும். சிக்கன் மற்றும் பாஸ்மதி அரிசி சேர்த்து குறைந்த சூட்டில் தம் போட்டு செய்வது சிக்கன் பிரியாணியாகும். எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Hyderabad Chicken Briyani

தேவையான பொருட்கள் :

சிக்கன் எலும்புடன் – 3 /4 கிலோ
வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கி நன்கு வதக்கிக் கொள்ளவும்)
எண்ணெய் – 1 /4 கப்
நெய் – 2 மேசைக்கரண்டி
மல்லித்தழை – 1 /4 கப்
புதினா – 1 /4 கப்
குங்குமப்பூ – 1 தேக்கரண்டி
வெது வெதுப்பான பால் – 1 /2 கப்
சாதத்திற்கு,
பாஸ்மதி அரிசி – 3 கப் (அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்)

கிராம்பு – 2
மராட்டி மொக்கு – 1
அனாசிப்பூ – 1
கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
சிக்கன் ஊற வைப்பதற்கு
பச்சை மிளகாய் – 5 -6 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி
தயிர் – 1 /2 கப்
கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி

எலுமிச்சம்பழச்சாறு – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க
மல்லித்தழை – 1 /4 கப் (பொடியாக நறுக்கவும்)
புதினா – 1 /2 கப் (பொடியாக நறுக்கவும்)
மிளகு – 7 – 8
பட்டை – 1, கிராம்பு – 3, ஏலக்காய் – 3

செய்முறை :
அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரிந்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

சிக்கனை கழுவி வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் புதினா, மல்லித்தழை நீங்கலாக மீதமுள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இறுதியாக புதினா, மல்லித்தழை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து, ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களையும் இதனுடன் சேர்த்து ஊற வைக்கவும். இதன் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம் சிறிது சேர்க்கவும்.  அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 1 – 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இதனுடன் நெய், எண்ணெய், கருஞ்சீரகம், பிரியாணி இலை, மராட்டி மொக்கு அனாசிப்பூ (1 ), பட்டை (1 /4 ” ), கிராம்பு(2 ) சேர்க்கவும்.

குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலுடன் கலந்து வைத்திருக்கவும். அதே அடி கனமான பாத்திரத்தை சூடு செய்து, அதில் நெய், எண்ணெய் சேர்த்து, ஊற வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து 2 நிமிடங்கள் அதிக சூட்டில் வைக்கவும்.

இதன் மேலே வேக வைத்துள்ள சாதத்தை கொட்டி பரப்பி விடவும். இதன் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம், மீதமுள்ள மல்லி, புதினா இலை சேர்க்கவும். இறுதியாக குங்கம்பூ கலவையை ஊற்றவும்.

பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு கொள்ளவும். திக்கான சமையலறை துண்டால் இருக்கக் கட்டி பின் அதற்கு மேலே மூடி போடலாம். Hyderabad Chicken Briyani

சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார். விரும்பினால் முந்திரி, திராட்சை போன்றவற்றை வெண்ணையில் வறுத்தும் போடலாம்.

மசாலா மீன் ப்ரை செய்வோமா?

காளான் பிரியாணி செய்யலாம் வாங்க…!

சுவையான நண்டு கிரேவி செய்யலாம் வாங்க

அருமையான ஸ்வீட்டை அரிசி மாவிலேயே செய்யலாம்.

காரம் சாரமான சுவையோடு கமகமவென்று நண்டு சூப் எப்படி செய்யலாம்?

வீட்டில் எறும்புத் தொல்லையா? உங்களுக்காக சில டிப்ஸ்!

சுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க!

வெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க!

பீட்சாவில் தோசை

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்து சாப்பிட விருப்பமா?

tag: kitchen, Kitchen Tips in tamil, Hyderabad Chicken Briyani, Chicken Briyani



Leave a Reply

%d
Verified by MonsterInsights