பேசுவது மட்டும் திறமையில்லை

பேசுவது மட்டும் திறமையில்லை..!

668

பேசுவது மட்டும் திறமையில்லை..!|| how to speak effectively in Tamil


பேசுவது மட்டும் திறமையில்லை கவனிக்க வைப்பதுதான் திறமை!

நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் உங்கள் கவனம் முழுவதும் அவரிடம் செலுத்திப் பேசச் சொல்லுங்கள் கொஞ்சம் தடுமாறுவார். ஏன் அப்படி? எதனால் அப்படி? என்று யோசித்துப் பார்த்தீர்களா? ரொம்ப சிம்பிள் நம்மை ஒருவர் ஊர்ந்து கவனிக்கின்றார் என்றாலே எதிரே இருப்பவர் நாம் தவறில்லாமல் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் வார்த்தையைத் தேடுவார், வாக்கியத்தைத் தேடுவார், இதனால் சிறு சிறு தடுமாற்றம் வரும். பிறகு குறிப்பிட்ட அந்த நபர்களிடம் பேசும் போது அந்த பயம், நடுக்கம், தடுமாற்றம் எல்லாம் சரியாகப் போய்விடும்.

புதியதாக ஒரு மொழியை உதாரணத்திற்கு ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்ட ஒருவர் தம்முடன் வேலை பார்ப்பவர்களிடம் சகஜமாக ஆங்கிலத்தில் பேசுவார். அதுவே மற்ற யாரேனும் புதியதாக வந்தால் கொஞ்சம் தடுமாறச் செய்வார். தன்னோடு வேலை பார்க்கும் சக ஊழியர் ஆங்கிலேயராக இருந்தாலும் அழகாக அவரிடம் பேசும் நபர் மற்றவர்களுடன் பேசும் போது கொஞ்சம் தடுமாறுவது ஏன். அவர் புதியவர் நான் பேசுவதில் ஏதாவது தவறிருந்தால் அவர் என்ன நினைப்பாரோ என்ற எண்ணம்  உள்ளுக்குள் வருவதால் வரும் தடுமாற்றம்தான் அது.

இதையும் படிக்கலாம்

இது கொஞ்ச சில நாட்களில் சரியாகப் போய்விடும். ஆனால் தாய்மொழியில் பேசும் சிலர் தாம் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் பேசுவார்கள். தாம் பேசுவது மற்றவர்களுக்குப் புரிகிறதா? அவர்கள் நாம் பேசுவதைக் கவனிக்கின்றார்களா என்று பார்க்கக் கூட மாட்டார்கள் அவர்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுகின்றேன் என்ற பெயரில் போட்டுத் தள்ளிவிடுவார்கள். அதாவது அறுத்துத் தள்ளிவிடுவார்கள். இது அவர்களுக்கான பதிவுதான். இவர்களைப் போலச் சிலர் மேடைகளில் கூட சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள். பார்வையாளர்கள் பாடு படு திண்டாட்டம்தான். அதுவும் கொஞ்சம் பெரிய ஆட்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், அரசியல்வாதி என்றால் ஒன்றுமே சொல்லமுடியாமல் அதாவது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இருக்கும் நிலை உண்டாகும். அதை யாரும் அவர்களிடம் சொல்லவும் மாட்டார்கள் அந்த பேச்சாளர்களும்(?) நாம் நன்றாகத்தான் பேசுகிறோம் என்று எண்ணிக் கொண்டு மற்றொரு பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவு ஆத்து ஆத்துன்னு ஆத்துவார். உட்கார்ந்து கேட்பவர்கள் காதுகள்தான் பாவம்.. இந்த மாதிரி ஆட்கள் யாராவது இருந்தால் இதைச் சொல்லிக் கொடுங்கள்.

“ஐயா நீங்கப் பேசுவது அருமையாக இருக்கிறது. உங்கள் குரல் மிக அருமை, ஆனால் நீங்க என்ன பேசுகின்றீர்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று சொல்லுங்கள். நீங்கள் சொல்வதைக் கேட்கும் மனதிருந்தால் கேட்பார், கொஞ்சம் வேறு மாதிரியான ஆளாக இருந்தால் உங்கள் கண்ணம் வீங்கவும் வாய்ப்புண்டு. அதற்கு நான் பொறுப்பில்லை… அப்படி காது கொடுத்து நீங்கள் சொல்வதைக் கேட்பவர் என்றால் அவரிடம் சொல்லுங்கள்.

  • என்ன தலைப்பு பற்றி வேண்டுமோ பேசுங்கள்.
  • தலைப்புக்குத் தகுந்த துணை விசயங்களை எடுத்துப் பேசுங்கள்.
  • எதிரில் இருப்பவர்கள் முகத்தைப் பார்த்து உங்களை  கவனிக்கிறார்களா  என்று பார்த்துப் பேசுங்கள்.
  • பொத்தாம் பொதுவாக ஒரு  விபரங்களைச் சொல்லாதீர்கள். புள்ளி விபரங்களுடன்  சொல்லிப் பாருங்கள் உங்களை ஒரு கூட்டம் ரசிக்க ஆரம்பிக்கும்.
  • வரலாறுகளைச் சொல்லும்போது அதன் காலங்களைச் சொல்லி பேசி பாருங்கள் விபரம் தெரிந்தவர் பேசுகிறார் என்ற  எண்ணம்  ஆடியன்ஸ்  மனதில்  ஆழமாகப் பதியும்.
  • இந்த ஒரு செய்தியுடன் முடிக்கிறேன் என்றால் அதோடு முடித்துவிடுங்கள். மீண்டும் வேறொரு விசயத்தை ஆரம்பிக்காதீர்கள்.
  • குறிப்பாக எதிரில் இருக்கும் வயதினர்களுக்குத் தகுந்தார்போல பேசுங்கள் அதுதான் ரொம்பவும் முக்கியம்.
  • இதைப் படிக்கிற நீங்களும் பேச்சாளர்களாக ஆகும் போது  இதைக்  கொஞ்சம்  நியாபக  படுத்திக்கொள்ளுங்கள்.

Our Facebook Page

Keywords: How to speak effectively
%d bloggers like this: