முகத்துல கரும்புள்ளியா? அப்போ நீங்க இதை செஞ்சா போதும்! how to prevent dark spots on face.
மற்றவர்கள் நம்மை அடையாளப்படுத்துவது நமது முகம் தான். அதில் கரும்புள்ளிகள் இருந்தால் அதை எப்படி சரிசெய்வதென்று பலரும் தடுமாறுகிறோம். அவர்களுக்காக கீழே சில எளிய முறையில் கையாளக்கூடிய சில டிப்ஸ். இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக்க இந்த வழிமுறைகளை கையாண்டு பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
முகத்தில் கரும்புள்ளிகள் வராமல் தடுக்க எளிமையான டிப்ஸ். 01
How to prevent dark spots on face?
முகத்தில் கரும்புள்ளி தடுக்கும் டிப்ஸ். 01
- கோடைக்காலமோ குளிர்காலமோ எல்லா காலங்களிலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். சருமத்தின் பிஹெச் அளவை பாதிக்காதவற்றை தேர்வு செய்வது அவசியம். எஸ்பிஎஃப் அளவும் 30 அளவில் இருப்பதை பார்த்து தேர்வு செய்யுங்கள். இது குறித்து சந்தேகம் இருந்தால் சரும பராமரிப்பு நிபுணரின் ஆலோசனை பெறவும் தயங்காதீர்கள்.
முகத்தில் கரும்புள்ளி தடுக்கும் டிப்ஸ். 02
- சூரியனிடமிருந்து வரும் புற ஊதா கதிர்கள் நேரடியாக சருமத்தின் மீது பாயும் போது சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க செய்கிறது. இது முகத்தில் கரும்புள்ளியை உண்டாக்கிவிடுகிறது. நாள்பட்ட சரும பாதிப்பினால் உண்டாகும் கரும்புள்ளியை தடுக்க சருமத்தை சூரியனிடமிருந்து பாதுகாப்பதை உறுதி செய்யுங்கள்.
முகத்தில் கரும்புள்ளி தடுக்கும் டிப்ஸ். 03
- முகத்தில் வரும் முகப்பருக்களை கவனமாக கையாள வேண்டும். இல்லையெனில் அவை தழும்புகளை உண்டாக்கிவிடக்கூடும். முகப்பருக்கள் வருவதற்கும் காரணங்கள் உண்டு. மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய முகப்பருக்கள் இரண்டு நாட்களில் மறைந்துவிடக்கூடியவை.
முகத்தில் கரும்புள்ளி தடுக்கும் டிப்ஸ். 04
- முகப்பருக்களை கிள்ளிவிடுவதால் அது அருகில் இடங்களுக்கும் பரவி விடக்கூடும். இதனால் முகத்தில் அநேக இடங்களில் முகப்பருக்கள் வரக்கூடும். இவை தழும்பாக மாறி கரும்புள்ளிகளை உருவாக்கும். அதனால் முகப்பருக்கள் வரும் போதே அதை கவனமாக கையாண்டால் கரும்புள்ளிகளை தடுத்துவிடலாம்.
முகத்தில் கரும்புள்ளி தடுக்கும் டிப்ஸ். 05
- ஹார்மோன் சமநிலையின்மை ஏற்றத்தாழ்வாக இருந்தாலும் கரும்புள்ளிகள் உருவாக கூடும். ஏனெனில் ஹார்மோன்கள் ஈர்ஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் சருமம் சூரிய ஒளியில் படும் போது அதிக மெலனின் உற்பத்தியை தூண்டும். அதனால் தான் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக கரும்புள்ளி பிரச்சனையை கொண்டிருக்கிறார்கள்.
முகத்தில் கரும்புள்ளி தடுக்கும் டிப்ஸ். 06
- குறிப்பாக கர்ப்பக்காலத்தில் தான் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் கர்ப்பகாலத்தில் கொஞ்சம் கவனமெடுத்தால் முகத்தில் கரும்புள்ளி வராமல் தடுக்கலாம். அதே நேரம் குறிப்பிட்ட சில க்ரீம் வகையறாக்கள் தவிர்ப்பதே நல்லது. மெனோபாஸ் காலம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை இருந்தாலும் அது சருமத்தை பாதிக்காத அளவுக்கு பராமரிப்பு மேற்கொள்வது அவசியம்.
முகத்தில் கரும்புள்ளி தடுக்கும் டிப்ஸ். 06
- உடலில் மிகப்பெரிய உறுப்பு சருமம் தான். சருமத்தில் கரும்புள்ளிகளை தூண்டும் ஃப்ரீரேடிக்கல்ஸ் வளர்ச்சியை தடுக்கும் உணவுகளை அடிக்கடி எடுத்துகொள்ள வேண்டும்.
முகத்தில் கரும்புள்ளி தடுக்கும் டிப்ஸ். 07
- சரும நன்மைக்கு உதவும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்தால் அது சருமத்துக்கு எதிர்ப்புசக்தியை அளிக்க செய்கிறது. இதனால் சருமம் கரும்புள்ளிகளை எதிர்த்து போராடுகிறது. முகப்பருக்களால் உண்டாகும் வடுக்களையும் போக்குவதற்கு உணவுகளிலும் கவனம் செலுத்துங்கள்.
முகத்தில் கரும்புள்ளி தடுக்கும் டிப்ஸ். 08
- வைட்டமின் சி நிறைந்த தக்காளி, எலுமிச்சை, பெர்ரி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அசைவ உணவில் சால்மன் மீன் போன்றவற்றை சேர்த்து வருவதன் மூலம் சருமம் பளபளப்பாக இருக்கும். கரும்புள்ளிகள் வருவதையும் தடுக்க செய்யும்.
Keywords: Health tips, Beauty Tips in Tamil, Face beauty Tips, tips in tamil,