அரசு வேலைக்குத் தயாராவது எப்படி? (ஓர் வழிகாட்டித் தொடர்)
How to prepare for government Jobs? || Guide series
இந்தத் தொடரில் அரசு வேலை சம்பந்தமான வழிகாட்டி மற்றும் அரசு போட்டித் தேர்வுகள் பற்றியும் தெரிந்துகொள்ள இருக்கிறோம். அரசு வேலை என்பது பலருடைய ஆசை ஏன் லட்சியம் என்றுகூட சொல்லலாம். ஒருவரின் குடும்பம் மற்றும் தலைமுறையே கூட மாற்றக்கூடிய ஒரு சக்திதான் இந்த அரசு வேலை. இதனால் சமூகத்தில், குடும்பத்தில் மற்றும் உறவினர்கள் மத்தியில் நமக்கு ஒரு நல்ல அந்தஸ்து உருவாகிறது.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு & பட்டப்படிப்பு என அந்தந்த தகுதிக்கு ஏற்றவாறு பல்வேறு அரசு தேர்வுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அவ்வப்போது நடத்தப்படுகிறது.
முதலில் நாம் விரும்பக்கூடிய அரசு வேலையை தீர்மானிக்க வேண்டும். அதன்பிறகு அந்த வேலைக்கான தேர்வுகளுக்கு நாம் தயாராக வேண்டும். பொத்தாம் பொதுவாக அனைத்துவிதமான தேர்வுகளுக்கும் தயாராவது என்பது நமக்கு அதிக அளவில் பயனளிக்காது. ஒரு குறிப்பிட்ட அரசு வேலையை நாம் தேர்வு செய்து அந்த வேலை சம்பந்தமான தேர்வுக்கு மட்டும் நாம் முயற்சிக்கும் பொழுது எளிதாக அரசு வேலை நமக்கு கிடைக்க அது வழிவகுக்கும்.
How to prepare for government Jobs?
தேர்வு ஆணையங்கள் (Selection Commissions)
பல்வேறு தேர்வு ஆணையங்களை பற்றி இப்பொழுது பார்ப்போம். மத்திய அரசு பணிக்கு என தேர்வுகளை நடத்த UPSC (Union Public Service Commission), RRB(Railway Recruitment Board), SSC (Staff Selection Commission), IBPS (Institute of Banking PPersonnel Selection) etc., போன்ற தேர்வாணையங்கள் செயல்படுகின்றன. தற்பொழுது மத்திய அரசு வரும் 2022ஆம் ஆண்டு முதல் அனைத்து விதமான மத்திய அரசு பணிகளுக்கும் ஒரே தேர்வை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று மாநில அரசு வேலைக்கு என TNPSC (Tamilnadu Public Service Commission),TNUSRB (Tamilnadu Uniform Service Recruitment Board), TRB (Teachers Recruitment Board), TNEB (Tamilnadu Electricity Board), TNFUSRC (Tamilnadu Forest Uniformed Service Recruitment Committee) போன்ற தேர்வாணையங்கள் செயல்படுகின்றன.
தொடர்ந்து படிக்க வேண்டும் (Keep reading)
இந்தத் தேர்வுகளில் நாம் விரும்பக்கூடிய வேலை எது என்பதை தேர்ந்தெடுத்து அந்த தேர்வுக்கு என பிரத்தியேகமாக தயாராக வேண்டும், தினமும் குறைந்தது 4 முதல் 5 மணிவரை படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும். நாம் படிப்பதை தினமும் தொடர்ந்து படிக்க வேண்டும், முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களை பார்த்து வினாக்கள் எந்தெந்த பாடங்களில் இருந்து எழுப்பப்படுகிறது எந்த பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நாம் படிக்க வேண்டும்.
தேர்வு மொழிகள் (Languages)
தமிழக அரசு வேலைக்காக நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கேள்விகள் இருக்கும், நாம் விரும்பும் மொழியில் அந்த தேர்வினை எதிர்கொள்ள முடியும். படிக்கும்போது குறிப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மன உறுதியோடும், நம்பிக்கையோடும் தொடர்ந்து படிக்க வேண்டும்.நாம் எடுக்கும் இத்தொடர் முயற்சியானது நிச்சயம் நமக்கு வெற்றியை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படிப்பதையே முழு வேலை வைத்திருங்கள். (continue full time study)
தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் உங்களை முழுவதுமாக அந்த தேர்வுக்காக தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது. படிப்பதையே முழு வேலையாக அமைத்துக்கொள்வதன் மூலம் விரைவில் தேர்வில் வெற்றிபெற முடியும். பெரும்பாலானோர் கல்லூரியை முடித்த பிறகுதான் அரசு போட்டி தேர்வுக்கென தயார் ஆகிறார்கள், அப்படி இல்லாமல் கல்லூரி பயிலும்போதே தயாராக வேண்டும்.
அடுத்து வரும் தொடரில் தேர்வாணையங்கள் பற்றியும் அந்த தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள், அரசு பதவிகள், சம்பலம், வயது வரம்பு அதற்கான பாடத்திட்டங்கள் என்ன என்பதனை ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்.
அ.பைசல் அஹமது, D.EEE., B.E.,
V. களத்தூர்
Keywords: Guide series, government Jobs, How to prepare for government Jobs?
You must log in to post a comment.