அரசு வேலை வழிகாட்டி (தொடர்-3)

327

அரசு வேலை வழிகாட்டி தொடர்-3

How to prepare for government Jobs?

தொடர் 1

தொடர் 2

இந்தத் தொடரில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் இட ஒதிக்கீடு முறையை எவ்வாறு நடைமுறை படுத்துகிறார்கள் என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இட ஒதிக்கீடு 30% சதவீதத்திலிருந்து 40% சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்தார்.அந்த அறிவிப்பினை தொடர்ந்து, போட்டித் தேர்வுக்கு தயாராகிவரும் ஆண் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியதைத் தொடர்ந்து, பெண்களுக்கான இந்த இட அறிவிப்பு சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள், மற்றும் ஊடகங்களில் விவாதமாக மாறியதை நாம் அனைவரும் அறிவோம்.

பெண்களுக்கு கூடுதலாக 10% சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதால், ஆண் தேர்வர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு அதிக அளவில் பறிபோகும் என்றும் பெரும்பாலும் 70 முதல் 75 சதவீதம் வரை பெண்கள் மட்டும் வேலைக்கு செல்வார்கள் என்று பரவலான கருத்துக்களும், புள்ளிவிவரங்களும் பகிரப்பட்டன.

உண்மையிலேயே பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிப்பதால் ஆண்கள் பாதிக்கப்படுகிறார்களா? மேலும் இட ஒதுக்கீடு முறை எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

பொதுவாக இட ஒதுக்கீடு இரண்டு வகையாக பின்பற்றப்படுகிறது.

1. Vertical Reservation
2. Horizontal Reservation.

வகுப்பு வாரியாக வழங்கப்படும் இட ஒதுக்கீட்டையே Vertical Reservation என்கிறோம். இந்த இட ஒதிக்கீடு தமிழகத்தை பொறுத்தவரை 69% சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு நம் தமிழ்நாட்டில் மட்டும் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது நம் தமிழ் நாட்டிற்கே உரித்தான சமூகநீதிக்கான ஒரு சிறப்பு என கூட கூறலாம். Horizontal Reservation எனப்படுவது பெண்கள், விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு ஆகும். இதைப்பற்றி இன்னும் விரிவாக பார்ப்போம்.

How to prepare for government Jobs? அரசு வேலைக்கு தயாராவது எப்படி?

VERTICAL RESERVATION

*BC-30%[BC(பொது)26.5%,BC (முஸ்லிம்)3.5% உள் ஒதுக்கீடு].
*MBC-20% [MBC (பொது) 9.5%, MBC (வன்னியர்) 10.5% உள் ஒதுக்கீடு]
*SC-18% [SC (பொது)15%,SC (அருந்ததியர்)-3% உள் ஒதுக்கீடு]
*ST-1% சதவீதம்.
மொத்தம் 69% சதவீதம் போக பொதுப் பிரிவினருக்கு 31% சதவீதம் அளிக்கப்படுகிறது. இவ்வாறாக Vertical Reservation நடைமுறைப்படுத்தப்படுகிறது.

HORIZONTAL RESERVATION

*பெண்கள் 30% (விதவைகள் – 10% உள் ஒதிக்கீடு), தற்போது 40% மாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*மாற்றுத்திறனாளிகள் – 4%
*தமிழ் வழியில் கல்வி பயின்றோர் (PSTM – Person Studied in Tamil Medium ) -20%
*முன்னாள் ராணுவத்தினர் (Ex-Service men) 5%
இந்த Horizontal Reservation என்பது ஒவ்வொரு வகுப்புக்கும் (BC, MBC, SC, ST) தனித்தனியாக அவர்களின் Vertical Reservation க்கு ஏற்றார்போல் வழங்கப்படுகிறது.

இதனை இன்னும் எளிமையாகவும், தெளிவாகவும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஒரு தேர்வின் மூலம் ஆயிரம் நபர்களை நிரப்ப வேண்டிய உள்ளது என்று நாம் வைத்துக்கொள்வோம். அந்த ஆயிரம் நபர்கள் Vertical Reservation மூலமாகவும் Horizontal Reservation மூலமாகவும் எவ்வாறெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மற்றும் பெண்களுக்கு 40% சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பதனால் ஆண்கள் எவ்வாறு பாதிக்கப் படுகிறார்கள் என்பதையும் கீழ்க்காணும் அட்டவணை மூலம் பார்ப்போம்.

 

மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள General அதாவது பொதுப் பிரிவினருக்கான 31% சதவீதம், மொத்தம் 310 நபர்கள் எவ்வாறு Horizontal Reservation மூலம் நிரப்பப்படுகிறார்கள் என்பதை அட்டவணை 2ல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக General (பொது) பிரிவினருக்கான Vertical Reservation முறையில் ஒதுக்கிய 31% சதவீதத்தில் Horizontal Reservation வழங்கியது போக மீதம் 128 இடங்கள் மட்டுமே இருக்கும்.இந்த 128 இடங்கள் என்பது அனைவருக்கும் பொதுவானது அதாவது (BC, MBC, SC, ST மற்றும் பெண்கள்) என அனைவருக்கும் பொதுவானது. மேற்கூறிய வகுப்பைச் சார்ந்த நபர்கள் மற்றும் பெண்கள் முதல் 128 இடங்களுக்குள் மதிப்பெண் எடுக்கும்போது, அவர்கள் தங்கள் வகுப்பிற்கான இட ஒதுக்கீட்டை பயன்படுத்தாமல் பொது பிரிவிலேயே வேலையை தேர்ந்தெடுக்கலாம். அதைபோன்றுதான், பெண்களுக்கான 93 இடங்கள் (Horizontal Reservation) உறுதியாகி விட்டாலும், இந்த 128 இடங்களுக்குள் பெண்கள் வரும்பொழுது ஆண்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோகிறது.

உதாரணமாக, முதல் 128 இடங்களில் 50 பெண்கள் இடம் பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட Horizontal Reservation 93 இடங்கள் மற்றும் கூடுதலாக 50 இடங்கள் என மொத்தம் 143 இடங்கள் பெண்களுக்கே சென்று விடுகிறது மீதி 78 இடங்கள் மட்டுமே ஆண்களுக்கு கிடைக்கும். மேற்கூறிய புள்ளி விபரத்தில் பெண்களுக்கு 30% என நாம் கணக்கிட்டு உள்ளோம் அதை 40% என கணக்கிட்டால் இன்னும் பெண்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் எனவே தான் ஆண் தேர்வர்கள் பெண்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட 10% சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்.

Savrav Yadav (vs) State of Uttar Pradesh 2020 என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் Horizontal Reservation சம்பந்தமாக ஒரு தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அது என்னவென்றால், பெண்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கான மொத்த இடங்கள் என்பது பொதுப் பிரிவில் தேர்ச்சிப் பெற்ற பெண்களின் எண்ணிக்கையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

உதாரணமாக அட்டவணை 2 ல் கூறியவாறு பெண்களுக்கு 93 இடங்கள் உள்ளது. முதல் 120 இடங்களில் 50 பெண்கள் வந்து விட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட 93 இடங்களில் (93-50=43) 50 இடங்களை கழித்து மீதி 43 இடங்கள் மட்டுமே வழங்க வேண்டும். அப்படி வழங்குவதன் மூலம் அவர்களுக்கான Horizontal Reservation நோக்கம் நிறைவேறி விடுகிறது. நம் தமிழகத்தில் அவ்வாறு பின்பற்றப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டவணை 2 ல், பொதுப்பிரிவினருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட 31% சதவீதத்தில் எவ்வாறு Horizontal Reservation அமல்படுத்தப்படுகிறது என்று பார்த்தோம். அதைபோன்றுதான் ஒவ்வொரு வகுப்பிற்கும் (BC,MBC,SC,ST) என தனித்தனியாக அவர்களின் Vertical Reservation களுக்கு ஏற்றார்போல் (அட்டவணை – 1) Horizontal Reservation வழங்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் தேர்ச்சி விகித புள்ளிவிபரங்கள் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக இன்னு பல விபரங்களோடு அடுத்த பதிவில் பார்ப்போம்.

அ.பைசல் அஹமது, D.EEE., B.E.,

V. களத்தூர்

Our Facebook Page

Keywords: government Jobs, Horizontal Reservation, Vertical Reservation
%d bloggers like this: