காரம் சாரமான சுவையோடு கமகமவென்று நண்டு சூப் எப்படி செய்யலாம்?
Kitchen Tips: How to make crab soup with tasty?
தேவையான பொருட்கள்:
நண்டு – அரை கிலோ
3 – வெங்காயத் தாள்
கால் தேக்கரண்டி – மிளகுத்தூள்
ஒன்றரை தேக்கரண்டி – கான்ஃப்ளார்
2 – பச்சை மிளகாய்
4 – பூண்டு பல்
ஒரு துண்டு – இஞ்சி
கால் கப் – பால்
ஒரு தேக்கரண்டி – வெண்ணெய்
ஒரு தேக்கரண்டி – எண்ணெய்
தேவைக்கேற்ப – உப்பு
நண்டு சூப் செய்வோமா?
முதலில் வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைக்கவும்.
சுத்தம் செய்த நண்டை பாத்திரத்தில் வேகவைத்து கொள்ளவும். ஆறிய பிறகு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கி வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வதக்கியதோடு ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவும். சுவையான நண்டு சூப் தயார்.
மசாலா மீன் ப்ரை செய்வோமா? | |
காளான் பிரியாணி செய்யலாம் வாங்க…! | |
சுவையான நண்டு கிரேவி செய்யலாம் வாங்க | |
அருமையான ஸ்வீட்டை அரிசி மாவிலேயே செய்யலாம். | |
காரம் சாரமான சுவையோடு கமகமவென்று நண்டு சூப் எப்படி செய்யலாம்? | |
வீட்டில் எறும்புத் தொல்லையா? உங்களுக்காக சில டிப்ஸ்! | |
சுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க! | |
வெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க! | |
பீட்சாவில் தோசை | |
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்து சாப்பிட விருப்பமா? |
Keyword: crab soup in tamil, How to make crab soup?, kitchen tips
You must log in to post a comment.