How-to-maintain-good-health

ஆரோக்கியத்தை பராமரிக்க 6 டிப்ஸ்..! good health

149

ஆரோக்கியத்தை பராமரிக்க 6 டிப்ஸ்..!

How to maintain good health?

நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க (How to maintain good health?) என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். அதனாலேயே இந்த பதிவுக்கான தலைப்பையும் ஆரோக்கியத்தை பராமரிக்க 6 ஆலோசனைகள் என்று கொடுத்துள்ளேன். ஆக ஆரோக்கியத்தை பராமரிக்க 6 ஆலோசனைகளை பார்ப்போமா?

How to maintain good health?

1. உடற் பயிற்சி: Exercise

உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உடல் உழைப்பு கட்டாயமாக தேவை படுகிறது. நமது முன்னோர்கள் அதிகமான உடலுழைப்பு தந்தனர் அதனாலேயே அவர்களுக்கு உடற்பயிற்சி தேவையற்றதாகவே இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட சிலர் தவிர உடலுழைப்பை கொடுப்பவர்களின் விகிதம் மிகக் குறைவு.

எந்த மாதிரி உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்:

  • தினமும் குறைந்தது 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் நடைபயிற்சி செய்யலாம்.
  • குறிப்பிட்ட தூரம் ஓடுவதை தினமும் செய்யலாம் இது இதயத்திற்கு நல்லது.
  • நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவைகளை செய்யலாம். இதுவும் இதயத்திற்கு மிகவும் நல்லது.
  • எடை தூக்குவது, கை கால்களை உறுதியாக வைத்திருக்க தேவையான உடற் பயிற்சிகள் தினமும் செய்யலாம்.

2. உணவைத் தவிர்க்க வேண்டாம்: Don’t skip meals

தினந்தோரும் சீரான உணவுகளை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும். இது நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. அளவான ஆரோக்கியமான உணவு எடுத்து கொள்வதன் மூலம் நம் உள்ளத்தையும், உடம்பையும் சுறுசுறுப்பாக வைத்து கொள்ள முடியும்.

நாம் உண்ணும் உணவைத் தவிர்ப்பதால் உடல் ஆற்றல் மட்டுமல்லாமல் ஆரோக்கியமும் குறைந்துவிடுகிறது. ஆகையால் உணவில் கவனம் தேவை மக்களே.

இரவு தூக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

நல்ல தூங்கினால் இவ்வளவு நன்மையா? 

3. போதுமான தூக்கம்: Good sleep

தினமும் நம் உடலின் அசதியை சரி செய்ய தூக்கம் கட்டாயம் தேவைப்படுகிறது. தூங்காமலிருப்பதால் நம் ஹார்மோன்களை சீர்குலைத்து விடுகிறது. அதுவே நம் உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனையாகி விடுகிறது.

நாம் தினமும் இரவில் சராசரியாக 7 முதல் 9 மணிநேரம் நல்ல ஆழ்ந்த தூக்கம் தூங்க வேண்டும். நல்ல உறக்கத்திற்கு வழிகளை நமது தளத்திலேயே ஒரு பதிவு உள்ளதை அதை படித்து அதன்படி நல்ல தூக்கதை அடைந்து கொள்ளுங்கள்.

4. மன அழுத்தத்தை போக்க வேண்டும்: Relieve stress

இன்றைய கால சூழல் நமக்கு அதிகமான மன அழுத்தத்தை தந்துவிடுகிறது. அதாவது நமது பணியின் காரணமாவோ அல்லது குடும்ப பிரச்சனைகளால் கூட இருக்கலாம். அதற்கான சிறந்த வழி, வணக்க வழிபாடு, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது.

அதே போல நல்ல புத்தகங்கள் படிப்பது, யோகா செய்வது என்று பல வழிகளில் மன அழுத்தத்தை குறைக்கலாம். இதனால் நம் ஆரோக்கியமும், மனதும் சீரானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

5. நிற்பது மற்றும் நடப்பது: Standing and walking

ஆபிஸ்களில் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், அல்லது உட்கார்ந்து கொண்டு தினமும் வேலை செய்பவர்கள், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ஆரோக்கியத்திற்கு பிரச்சனையை உண்டாக்கும்.

சிறிது நேரத்திற்கு ஒரு தடவை எழுந்து நடக்க வேண்டும். அதாவது 45 நிமிடத்திற்கு ஒரு முறை எழுந்து நடக்க வேண்டும்.

இது கண்ணுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையை தரவல்லதாகும். உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் அப்போ அப்போ எழுந்து நிற்பது, நடப்பது போன்ற வேலைகளை செய்ய வேண்டும்.

6. தண்ணீர் அருந்துவது: Drinking water

ஒரு நாளைக்கு இந்த அளவு தண்ணீர் அருந்த வேண்டும், அந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் எப்போதெல்லாம் தாகம் எடுக்கின்றதோ அப்போதெல்லாம் கட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இது நம் உடலுக்கு நன்மையை பயக்கக்கூடியது. உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கிறது.

ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கான உணவு முறைகள் மாறுபடலாம். எது நமக்கு நல்ல ஆரோக்கியத்தை தருமோ அதையே நம் தேவைக்கு பயன்படுத்த வேண்டும். நேரத்திற்கு உண்டு சீக்கிரமாக உறங்கி, அதிகாலையில் எழுந்து நம் ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.

Our Facebook Page




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights