Ration Card

குடும்ப அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கும் முறை.

116

குடும்ப அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கும் முறை | How to link a Ration Card with an Aadhaar?

How to link a Ration Card with an Aadhaar?

அநேக நபர்களுக்கு ரேஷன் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கும். அப்படி இணைக்கப்படாதவர்களுக்காக இந்த பதிவு. இதில் உள்ள முறையில் உங்கள் ஆதார் எண்ணை உங்களது ரேஷன் கார்டுடன் (Ration Card) இணைத்துக் கொள்ளவும்.

உங்களது ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச (Application) செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

TNEPDS Application-ல் சென்ற உடன் ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் உடனே ஒரு OTP (One Time Password) நமது மொபைலுக்கு வரும். அந்த OTP எண்களை கொடுத்தவுடன் அப்ளிக்கேஷன் ஓபன் ஆகும்.

அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும். பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு நமது ஆதார் எண் திரையில் தோன்றும்.

உடனே நாம் “சமர்ப்பி” என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும்.

முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்ய வேண்டும். இது மிக எளிதான செயல். விரைவாக பதியப்பட்டு விடும்.

மேலும் இந்த Application மூலம் நமது ரேஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை வீட்டில் இருந்தே நாம் கண்காணிக்கலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு பொது விநியோகத்திட்டம்

Our Facebook Page




Leave a Reply

%d bloggers like this: