Home Remedies tips for Dry Hair

உங்கள் கூந்தல் வறண்டு போகின்றதா? அப்ப இது உங்களுக்கு தான்.

937

உங்கள் கூந்தல் வறண்டு போகின்றதா? அப்ப இது உங்களுக்குத் தான். Home Remedies tips for Dry Hair.

தோழிகளே உங்கள் கூந்தல் வறண்டு (dry hair) போய் காணப்படுகிறதா? அதைச் சரி செய்யமுடியாமல் தடுமாறுகின்றீர்களா? இதோ உங்களுக்கான வீட்டு வைத்திய டிப்ஸ்கள். இதற்காக நீங்கள் பெரிய அளவில் ஒன்றும் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே உங்களின் வறண்ட கூந்தலைச் சரிசெய்துவிடலாம்.

வறண்ட கூந்தலுக்கு சில யோசனைகள்
Treatment for dry hair

வெண்ணெய்: Home Remedies tips for Dry Hair.

வீட்டில் இருக்கும் வெண்ணெய்யை எடுத்து உங்கள் வறண்ட முடிகளில் தடவி மசாஜ் செய்யுங்கள், அரை மணி நேரம் ஊற விட்டு வழக்கம் போல் ஷாம்பூ போட்டுக் குளியுங்கள். பளபளப்பான கூந்தலைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

அவகாடோ பழம்: Home remedy for dry hair

அவகாடோ பழம் வாங்கி அதை நன்றாக மசித்து அதனுடன் முட்டை சேர்க்கவும். அதை அப்படியே ஈரமான கூந்தலில் தடவுங்கள். 20 நிமிடங்களுக்கு மேல் ஊற வைத்து கூந்தலைக் கழுவி மென்மையான கூந்தலைப் பெறலாம்.

முட்டை: Home hair treatment

கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கூந்தலில் தடவவும். இருபது நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். பிறகு பாருங்கள் உங்கள் கூந்தலை.

ஆலிவ் ஆயில்: Home Remedies tips.

வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த மருந்து ஆலிவ் ஆயில் என்றும் கூறலாம். அரை கப் ஆலிவ் ஆயிலை மிதமான சூட்டில் எடுத்து கூந்தலில் தேய்க்கவும். முக்கால் மணிநேரத்திற்குப் பிறகு ஷாம்பூ செய்தால் பளபளப்பான கூந்தலைப் பெறலாம்.

கற்றாழை: Hair treatments at home.

கற்றாழை ஜெல் மூலமாக உங்கள் வறண்ட கூந்தலைச் சரிசெய்யலாம். சோற்றுக்கற்றாழை ஜெல்லை முடியின் வேர்க்கால்களில் படும் படி தேய்க்கவும். இதன்மூலம் அது முடியின் வேர்க்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதைத் தடுக்கிறது. கற்றாழை ஜெல்லை தடவிய பிறகு ஒரு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் சாம்பு கொண்டு அலசுங்கள். கூந்தலில் அருமையான மாற்றத்தைக் காண்பீர்கள்.

Our Facebook Page




%d bloggers like this: