UAE-ல் ஹிஜிரி வருடப்பிறப்பு விடுமுறை அறிவிப்பு.

816

UAE: ஹிஜிரி வருடப்பிறப்பு விடுமுறை அறிவிப்பு.


Gulf News Tamil: Hijri New Year Holiday in UAE.


ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 23-ம் தேதி ஞாயிற்று கிழமை ஹிஜிரி வருடப்பிறப்பு முன்னிட்டு அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறை கணக்கிடுதலை மைய்யமாக வைத்து ஹிஜிரி 1442  தொடக்கத்தைக் குறிக்கும் முஹர்ரம் முதல் பிறையானது இந்த (ஆகஸ்ட்) மாதம் 23 ஆம் தேதி என்று அமீரக மனித வள மேம்பாட்டு துறை தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. Gulf News Tamil

ஐக்கிய அரபு அமீரக மனித வள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்தியின் படி ஆகஸ்ட் 23, ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை / மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஹிஜிரி வருடப்பிறப்பு என்பதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக பொதுத்துறை மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். திங்கள் கிழமை (24.08.2020) அன்று வழக்கம் போல் அனைத்து துறையும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கு ஞாயிற்று கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

keyword: Gulf News Tamil




%d bloggers like this: