Hijri New Year: Holiday announcement for private sector
ஜூலை 7ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஹிஜ்ரி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு துறை இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தது. இதற்கான தேதி இஸ்லாமிய நாட்காட்டியின்படி முஹர்ரம் 1ஆம் தேதி ஆகும். இது 1446 புதிய ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கத்தை குறிக்கும்.
ஓமான் போன்ற பிற நாடுகளும் ஹிஜ்ரி புத்தாண்டு தினத்திற்காக ஜூலை 7ஆம் தேதி, அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இது அரசு பணியாளர்கள் மற்றும் வாரத்தில் 5-நாள் வேலையில் இயங்கும் தனியார் துறை நிறுவனங்களுக்கான நீண்ட வார இறுதி விடுமுறையாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், இருப்பவர்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இன்னும் ஒரு சில விடுமுறைகள் இருக்கின்றன. இதில் முஹம்மது நபி (PBUH) பிறந்த நாள் விடுமுறையும் அடங்கும். நாட்டின் தேசிய தினமும் நீண்ட வார இறுதி விடுமுறையாக கொண்டாடப்படும்.
இந்த விடுமுறைகள் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை அறிவித்த 2024 விடுமுறை பட்டியலின் படி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Keywords: Hijri New Year, Dubai Tamil News, UAE Tamil News, GCC Tamil News, Gulf Tamil News
அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?
துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்
UAE: வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்புப் பிரசங்க நேரம் குறைப்பு
குவைத்தில் ஹலால் உணவுக்கான புதிய விதிமுறைகள்