ஆரோக்கியமான மற்றும் தெளிவான சருமத்தை பெற.!! healthy and clear skin.
சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாப்பது அவசியம். பல விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பாதுகாக்க நினைப்பதை விட, வீட்டிலேயே பயனுள்ளதாக இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பாதுகாக்கலாம். இயற்கை பொருள்களால் தயாரிக்கப்படும் ஒரு பானம் சரும பிரச்சினைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்தை போலவே சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம். சருமத்திற்கும் அதற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. நமது சருமம் வெளிப்புற சூழலில் அதிகப்படியான செயல்களுக்கும் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் ஏற்ப அதிகமாக பாதிக்கப்படுகிறது. ஆனால் வெளிப் புறச் சூழல்கள் காரணமாக நமது சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியாது.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு (For healthy skin)
நமது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் சில அத்தியாவசிய உணவுகளின் குறைபாடு காரணமாக சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அழகாக இருப்பதற்காக விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களுக்கு ஆயிரக்கணக்கில் பணங்களை செலவழிப்பது போல், உங்கள் சருமத்திற்கு தேவையான ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வது அவசியம்.
ஊட்டச்சத்துக்கள்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அறியப்பட்ட சில ஊட்டச்சத்துக்களில் ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா -3 மற்றும் -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும், வைட்டமின்கள் ஈ மற்றும் சி போன்றவை அடங்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளிலும், மசாலா மற்றும் மூலிகைகளிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் நமது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க தேவையான வைட்டமின்கள் உள்ளன.
புறஊதாக் கதிர்கள் (For healthy skin)
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களின் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க வைட்டமின் ஈ தேவை ஆகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் முகப்பரு பிரச்சனைகளை சரி செய்ய உதவும் சில பானங்கள் உள்ளன. அவற்றில் தேங்காய் பால் மற்றும் மஞ்சள் போன்று சில அத்தியாவசிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பானத்தை பற்றி பாப்போம்.
வயதான தோற்றத்தை சரிசெய்ய (For healthy skin)
தேங்காய் மற்றும் மஞ்சள் கலந்து தயாரிக்கப்படும் பானம் வயது முதிர்வு காரணமாக ஏற்படும் சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. இந்த செய்முறையில் வாழைப்பழம், அன்னாசி, ஆளிவிதை, தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் போன்றவையும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பானத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை அளிக்கிறது.
தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய்ப்பாலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் முக்கியமான வைட்டமின் நிறைந்த உணவுகள், ஆளிவிதைகள் ஆகியவற்றில் சருமத்திற்கு தேவையான ஒமேகா கொழுப்பு அமிலங்களின் நன்மைகள் நிறைந்துள்ளன. இஞ்சி மற்றும் மஞ்சள் இரண்டிலும் உள்ள நன்மைகள், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் சரும பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
பானத்தை தயாரிக்கும் முறை:
- வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
- அவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஆளி விதை, அரைத்த இஞ்சி, தேங்காய் எண்ணெய், இலவங்கப்பட்டை தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
- இதனுடன் தேங்காய்ப் பாலைச் சேர்த்து, அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- உங்களுக்கு வேண்டுமானால் இனிப்பு சுவைக்கு சிறிது தேன் சேர்க்கலாம்.
ஆரோக்கியமான மற்றும் தெளிவான சருமத்தை பெற, வெளியில் சென்று வந்ததும் சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய முகத்தை கழுவுவது அவசியம். மேலும் உங்களது உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ளவும்.
keywords: healthy and clear skin, Sarumam