உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும்  ‘பிஸ்தா’ விலே இருக்கிறது

தெரியுமா..? உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும்  ‘பிஸ்தா’ விலே இருக்கிறது!

558

தெரியுமா..? உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும்  ‘பிஸ்தா’ விலே இருக்கிறது!

Health Tips: The whole protein you need is in pistachios!

உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும்  ‘பிஸ்தா’ விலே இருக்கிறதுநமது உடம்புக்கு தேவையான புரதம் முழுவதும் பிஸ்தாவில் இருக்கிறது. உயர் புரத உணவு பருப்புகள் என்று குறிப்பிடும் போதெல்லாம், முந்திரி, பாதாம், பிஸ்தா என்று தான் எல்லோரும் சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஆம் அவை நூற்றுக்கு நூறு உண்மையானவை. இந்த கொட்டைகள் பல சமையல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவது நமக்கு தெரிந்ததுதான். அதோடு மட்டுமல்லாமல், இவைகள் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அதில் இந்த ‘பிஸ்தா’ வும் ஒன்று.

Benefits of Pista in Tamil

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான புரதம் என்ற வரையறைக்கு பிஸ்தாக்கள் தகுதி பெற்றுள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் நுஜெல் மிட்செல், இது சம்பந்தமாக எழுதிய ‘The Plant Based Cyclist’ புத்தகத்தில், ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் பிஸ்தாவில் இருக்கிறது.  புரதத்தின் முழு வடிவம் என்று கருதலாம் என்று கூறியுள்ளார். வறுத்த பிஸ்தாவில், பாலில் காணப்படும் 81 சதவீத தேவையான புரதம் மற்றும் 80 சதவீதம் கேசீன் (casein) உள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

Tamil Health Tips :

மத்திய ஆசியப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட பிஸ்தாவைப் பற்றி நாம் குறிப்பாகப் பேசினால், பிஸ்தா குல்பி, பிஸ்தா பாதம் பால், பிஸ்தா இனிப்புகள் போன்று பலவகை உணவுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம். இந்த பருப்பு மிகவும் சத்தானது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது. இதனால் நல்ல ஆற்றல், குறைந்த கலோரி போன்று எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. இதனால் பிஸ்தாவில் புரதச்சத்து நிறைந்தவை என்று மட்டும் கூற முடியாது. இருந்தாலும் இது ‘முழுமையான புரதத்தினாலானது’ என்று எல்லோரும் ஒத்து கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக அசைவம் சார்ந்த புரதங்களிலிருந்து சைவ புரதத்திற்கு மாற விரும்புவோருக்கு இது நல்ல பயன் தரும் என்று கூறுகிறார்கள்.

tag: health tips, health tips in tamil, tamil health tips, Benefits of Pista in TamilLeave a Reply

%d bloggers like this: