நெல்லிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் பயன்.

222

நெல்லிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் பயன்.

நெல்லிக்காய் பார்த்தாலே நம்மை அறியாமல் நாக்கில் எச்சில் ஊறும். அறுசுவையும் கொண்டது இந்த நெல்லிக்காய். இது எளிதாக தற்போது நம் தமிழகத்தில் கிடைக்கிறது. அதன் பயன்களை தெரிந்துக் கொண்ட பலரும் அதை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி என்னதான் இந்த நெல்லிக்காயில் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நெல்லிக்காயில் என்ன இருக்கிறது:

வைட்டமின் சி இதில் அதிகமுண்டு. குறிப்பாக ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்காயில் வைட்டமின் சி 20 மடங்கு சத்து அதிகமாக உள்ளது. இதில் புரதச்சத்துக்கும் குறைவு இல்லை.  அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்தும் அதிகமாக இருக்கின்றது. கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

பயன்கள்:
  • நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக்குகிறது.
  • முதுமையை விரட்டும் ஆற்றல் இந்தக்காயில் உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றி நோய்கள் இல்லாமல் உடலை தற்காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
  • பித்தம்தான் உடலின் முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. பித்தத்தை குறைத்து உடலிலும், இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.
  • நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி யானது உடலிலுள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை அதிகப்படுத்துகிறது.
  • இதய வால்வுகள், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதயத்தில் அடைப்பு எற்படாமல் தடுக்கிறது.
  • நெல்லிக்காய் இலையை கொஞ்சம் எடுத்து தண்ணீரில் கொதித்தப்பின் ஆறவைத்து வாய்க்கொப்பளிப்பதன் மூலம் வாய்ப்புண் தீரும்.
  • நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பதால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
  • நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை குடித்துவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.Leave a Reply

%d bloggers like this: