நல்ல தூக்கம் வேண்டுமா?

நல்ல தூக்கம் வேண்டுமா? இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.

229

நல்ல தூக்கம் வேண்டுமா? இதை செய்யுங்கள், இதை தவிருங்கள். Do this to get good sleep!

உலகில் பிறந்த ஜீவ ராசிகள் அனைத்திற்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. இதை உலகமும் ஏற்றுக் கொண்ட விசயம். ஆனால் மனிதகுளத்தில் நாம் ஏற்படுத்திக் கொண்ட கால மாற்றத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றோம். அதில் இந்த தூக்கமும் ஒன்று. நல்ல முறையில் நிம்மதியான தூக்கத்திற்கு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Health tips in Tamil

நல்ல தூக்கம் வேண்டுமா?

தூக்கமின்மைக்கான காரணங்கள்: 

 • மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவைகள் நமது முறையான தூக்கத்தை கெடுத்துவிடும் காரணிகளாக இருக்கின்றது.

நல்ல தூக்கம் வேண்டுமா? இதையெல்லாம் செய்யுங்கள்:

Health tips

 • இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும். தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.
 • வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.
 • தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது. அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும்.
 • மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
 • இரவு நேரத்தில் அரிசி மற்றும் ரவை, ஆப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த எளிதில் ஜீரணமாகும் உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
 • ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சை ஆகிய பழங்கள் தூக்கத்திற்கு நல்லது.
 • சாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.
 • தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை கட்டாயம் சேர்த்து கொள்ளுங்கள்.
 • கேழ்வரகு போன்ற தானிய உணவுகளை காலை நேரத்தில் உட்கொள்ளலாம்.
 • இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது.

நல்ல தூக்கம் வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீர்கள்:

Tamil Health tips

 • தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சமாக இருக்க கூடாது.
 • மதிய நேரத்தில் தூங்காமல் இருப்பது.
 • பிரச்சனைகளை நினைத்து கொண்டு மனக் கவலைகளுடன் படுப்பதை தவிற்க வேண்டும்.
 • ஆபிஸ் வேலையை உங்கள் படுக்கை அறைகளில் செய்வது கூடாது.
 • மது அருந்தும் பழக்கத்தை நிறுத்திவிடவேண்டும்.
 • புகை பிடிப்பதும் நல்ல தூக்கத்தை கெடுத்துவிடும்.
 • பதப்படுத்தப்பட்ட மற்றும் தயார் உணவுகள் சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கவும்.
 • அடிக்கடி குளிர்பானம், காபி குடிப்பதை நிறுத்தவும்.
 • மசாலா உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்.
 • இரவில் நீர்க்காய்கள் சேர்ப்பதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
 • தூக்கம் வராமல் தவிக்கும் வயதானவர்கள் உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்க்கவும்.

tag: health tips, health tips in tamil, tamil health tips,
Leave a Reply

%d bloggers like this: