கால்சியம் குறைவால் உண்டாகும் பிரச்சனைகள்!.

243

கால்சியம் குறைவால் உண்டாகும் பிரச்சனைகள்!.

கால்சியம் குறைவால் உண்டாகும் பிரச்சனைகள். சோர்வு, உடல் தசை வலி, கால் வலி, எரிச்சல்,  பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகமாக வலி ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் உண்டாவது கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகளாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள குறைபாடுகள் இருக்குமேயானால் நிச்சயமாக மருத்துவரிடம் சென்று கால்சியத்தின் அளவை சோதித்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. கால்சியம் குறைபாட்டில் மூலம் பல விதமான உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறுகின்றனர். அதை வருவதற்கு முன்பே தடுக்க வேண்டியது நமது அத்தியாவசிய கடமை ஆயிற்று. எனவே மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் நிச்சயமாக உங்கள் மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்வது மிகவும் நல்லது.

[the_ad id=”7251″]

கால்சியம் குறைபாடு எதனால் ஏற்படுகிறது

ஒஸ்டியோபெனிய என்கிற ஒரு காரணி ஆனது மினரல் அளவை எலும்பிலிருந்து குறைக்கிறது. எலும்பில் உள்ள மினரல் அளவானது குறையும் பொழுது ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் வியாதி வருகிறது. இந்த வியாதியானது எலும்பை மிகவும் ஒல்லியாக மாற்றிவிடுகிறது. எலும்பு மிகவும் ஒல்லியாக மாறும்பொழுது சுலபமாக உடைந்து விழுகிறது. இப்படி உடையும் பொழுது அதிகமான வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் உட்காருவதில் சிக்கல் முதுகு வலி போன்ற பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒரு சில எலும்பு முறிவுகள் தீர்வு காண முடியாமல் போய்விடுகிறது. நமக்கு இந்த வியாதி வராமல் இருக்க நிச்சயமாக கால்சியத்தின் அளவு மிகவும் அதிக அளவில் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

[the_ad id=”7251″]

உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறையும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. முக்கியமாக நமது எலும்புகளுக்கு அதிக அளவில் கால்சியம் சத்து ஆனது தேவைப்படுகிறது. எனவே கால்சியம் தினமும் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தினமும் நாம் கால்சியம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

குடல் புற்றுநோய்

உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறையும் பொழுது ஒரு புற்றுநோயானது உடம்பில் வருகிறது என்பதை கணித்துள்ளனர், கோலன் புற்றுநோய். உலகம் முழுவதும் பலவிதமான ஆராய்ச்சிகளும் கூறுவது என்னவென்றால் உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறைய குறைய பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது முக்கியமாக அடினோமா டியூமர். என்பது மேலே குறிப்பிட்ட கோலன் புற்றுநோய்க்கு அடித்தளமாக அமைகிறது. இந்த டியூமர் ஆனது கால்சியம் குறைபாடு மூலமாகவே வருகிறது என்று குறிப்பிடுகின்றனர். இந்த குறைபாடு அதிகரிக்க அதிகரிக்க அது புற்று நோயாக மாறிவிடுகிறது என்று கூறுகின்றனர்.

[the_ad id=”7251″]

இதய பிரச்சனை

கால்சியத்தின் அளவு குறைய குறைய பலவிதமான உடல் உபாதைகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். முக்கியமாக இதய கோளாறுகள் ஏற்படும் என்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் என்கிற பல்கலைக்கழகமானது இதை உறுதி செய்துள்ளது. நம் இதயம் இயங்குவதற்கு பலவிதமான விட்டமின்கள் மினரல்கள் தேவைப்படுகிறது. அதில் ஒன்றில் முக்கியமானதுதான் கால்சியம். கால்சியம் உடலில் குறைபாடு ஏற்படும்போது, மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட பலவிதமான வியாதிகள் வருவதற்கு அடித்தளமாக அமைகிறது. உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கால்சியம் சாப்பிட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

​ரத்த அழுத்தம்

உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படும் பொழுது, நம் உடலில் உள்ள ரத்தக் அழுத்தத்தின் அளவும் அதிகமாகிறது. அதாவது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதிகமான மன அழுத்தம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்போது அந்த உயர் ரத்த அழுத்தமே பலவிதமான வியாதிகளுக்கு வித்திடுகிறது. மேலும் அதிகமான மன அழுத்தம் டென்ஷன் என்பது நம் மன அமைதியை குலைத்து விடுகிறது. எனவே நம் உடலில் கல்சியத்தின் அளவு முடிந்த அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் கால்சியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

[the_ad id=”7251″]

மாதவிடாய் பிரச்சினைகள்.

கால்சியத்தின் அளவு குறையும் பொழுது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமான வயிறு வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சில வயதிற்கு பின் பெண்களுக்கு இந்த மாதவிடாய் முடிந்துவிட்டாலும் மாதவிடாய் இருக்கும் பெண்களுக்கு அந்த காலகட்டங்களில் வலி மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். எலும்புகள் மிகவும் பலவீனமானதாக மாறிவிடுகிறது. எனவே கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி போன்ற பிரச்சினைகளும் அதிகமாக ஏற்படும் என்று கூறுகின்றனர். சிறிய அளவில் கீழே விழுந்தாலோ ஏதாவது அடிபட்டாலோ பெரிய அளவில் வலி ஏற்படும். என்று கூறுகின்றனர் இந்த மாதிரி வலி உள்ளவர்கள் நிச்சயமாக உங்களது கால்சியத்தின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் அதிகமான கால்சியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.​

கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்

சில உணவுகளில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதை பற்றி தற்பொழுது பார்க்கலாம். பன்னீர் தயிர் பால் கீரை வகைகள் வாழைப்பழம் போன்றவைகளில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக பால் பொருட்களிலும் கால்சியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக கீரை வகைகளை நாம் பலரும் பெரிதாக உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. கீரை வகைகளில் அதிகமான கால்சியம் இருக்கிறது. இதுபோக ஆரஞ்சு, ஒரு சில விதைகள் போன்றவைகளிலும் கால்சியம் இருக்கிறது உங்களது தினசரி உணவு வகைகளில் மேலே குறிப்பிட்ட உணவு இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

[the_ad id=”7251″]
Leave a Reply

%d bloggers like this: