குங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ…

236

குங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ…

[the_ad id=”7332″]

குங்குமப்பூ இந்த பெயர் கேட்டாலே நமக்குக் குங்குமப்பூவே, கொஞ்சும் புறாவே பாடல் நினைவுக்கு வந்துவிடுகிறது. இன்னும் சிலருக்குக் கற்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை செக்க செவேல்னு பிறக்கும் என்று பேசுவதைக் கேள்விப் பட்டிருப்பார்கள்.

முதலில் சொன்ன பாடல் வரிகள் குங்குமப்பூவின் தரத்தைப் பறைசாற்றும் விதமாக எழுதப்பட்டிருக்கலாம். இரண்டாவதாகச் சொன்னதில் எந்த அளவுக்கு உண்மையென்று எமக்குத் தெரியவில்லை. ஆனால் குங்குமப்பூ உணவில் பயன்படுத்துவதால் உடலிலுள்ள தோல் மினுமினுப்பாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எப்போவாவது குங்குமப்பூ உணவில் பயன் படுத்துவோம். இதைப் படித்த பிறகு தினமும் பயன்படுத்துவீர்கள்.

[the_ad id=”7251″]

இந்தப் பதிவில் குங்குமப்பூ கலந்த தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

  • குங்குமப்பூ நமது சருமத்தைப் பராமரிக்க ஏற்ற பொருள். இதைப் பருகுவதால் சருமம் பளபளப்பாக வைப்பதுடன், புத்துணர்வையும் தருகிறது. முகத்திற்குக் கண்ட கண்ட கிரீம் தடவுவதற்குப் பதிலா குங்குமப்பூ கலந்துத் தண்ணீரைக் குடித்தாலே போதும் முகம் பொலிவாகும். அதோடு மட்டுமல்லாமல் முகப்பரு போன்றவை வராமல் தடுக்கும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகமான வலியை இந்த குங்குமப்பூ கட்டுப்படுத்தும். மாதவிடாய் வருவதற்கு சில நாட்கள் முன்பாக இதை உட்கொள்வது நல்ல பயனைத் தரும். மாதவிடாய் வந்து வலியால் கஷ்டப்படும் நேரத்தில் இதைக் குடிக்கக்கூடாது இதனால் வலி கூடுதலாக வாய்ப்புகள் அதிகம்.
  • நீங்கக் காபி அல்லது டீ பிரியரா அதிலிருந்து விடுபட முடியலையா இந்த குங்குமப்பூ தண்ணீரைக் குடித்துப் பாருங்கள். உங்களுக்குக் காபி, தேநீரில் அதிக நாட்டம் இருக்காது.
  • இலையுதிர் காலம் போல முடியுதிர் காலமாகச் சிலருக்கு எப்போதுப் பார்த்தாலும் உதிர்ந்து கொண்டே இருக்கும். அதைக்கட்டுக்குள் கொண்டுவர இந்த குங்குமப்பூ தண்ணீர் குடித்தால் நல்ல பலன் இருக்கும். அப்புறமா உங்கள் கூந்தலைக் கட்டி எதை வேண்டுமானாலும் இழுக்கலாம்.
  • சர்க்கரையால் அவதிப்படுவோருக்கு இந்தப் பாணம் நல்ல மருந்து என்று சொல்லலாம். சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.

[the_ad id=”7251″]

இதையும் படிங்க [quote]உடற் சூட்டை தணிக்கும் பாதாம் பிசின்.[/quote]

இதையும் படிங்க[quote]சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க.[/quote]

குங்குமப்பூ தண்ணீர் எப்படி தயார் செய்வது.

இந்த குங்குமப்பூ வாங்குகிறதுதான் கஷ்டம். ஆனால் இந்த குங்குமப்பூ தண்ணீர் செய்வது நிறையச் சுலபம். ஆறு அல்லது 7 குங்குமப்பூ இலைகளை எடுத்து சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துவிடுங்கள். வெறும் வயிற்றில் அதைக் குடிச்சிடுங்க. ஒரு பதினைந்து நாளைக்கு விடாமல் குடித்து வாருங்கள் நல்ல மாற்றங்கள் உங்கள் உடலிலும் உள்ளத்திலும் தெரியும்.

அப்புறமா பாருங்கள் உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் ”குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே” ன்னு பாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

[the_ad id=”7250″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: