இதையெல்லாம் செய்யாதீங்க அப்புறம் வைற்று போக்கு நிக்காது.

201

இதையெல்லாம் செய்யாதீங்க அப்புறம் வைற்று போக்கு நிக்காது.

இதையெல்லாம் செய்யாதீங்க அப்புறம் வைற்று போக்கு நிக்காது. வைற்று போக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. கிருமிகள், வைற்றுக்கு ஒவ்வாத உணவுகள் என்று அடுக்கி கொண்டே போகலாம். இந்த பதிவில் வந்த வைற்று போக்கு தொடராமல் எதை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

  • சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவை வயிற்றில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அதில் உள்ள அமிலமானது மலத்தை தளரச் செய்து வயிற்றுப் போக்கினை உண்டாக்கி விடுகிறது. சத்து நிரைந்த சிட்ரஸ் பழங்கள் என்றாலும் அதில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. அதிக அளவில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதன் மூலம் அவை வயிற்றுப் போக்கிற்கு காரணமாக அமைகிறது.  எனவே சிட்ரஸ் பழ வகைகளை அளவாக சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • சல்பர் மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள முட்டைகோஸானது வாயுத் தொல்லையை உண்டாக்கி அதனுடன் வயிற்றுப் போக்கையும் உண்டாக்கும். ஏனெனில் முட்டைகோஸில் கரையாத நார்ச்சத்து இருப்பதால் அது நேரடியாக குடலுக்கு சென்று வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது.

கீழாநெல்லி – மருத்துவ குணங்கள்

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்!

  • கரையாத நார்ச்சத்துக்கள் பூண்டிலும் அதிகமாக இருக்கிறது. ஆகையால் பூண்டும் வாயுத் தொல்லையை உண்டாக்கி வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும். ஆகையால் வயிற்று போக்கு பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு சாப்பிடாமல் இருப்பது நல்லது.
  • பருப்பு வகைகளும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கக்கூடியவை தான். அவை செரிமானப் பிரச்சனையை உண்டாக்குவதோடு, சில நேரங்களில் செரிமானமாகாத உணவுப் பொருட்கள் நேரடியாக பெருங்குடலை அடைந்து, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கிவிடும்.
  • காரமான மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் எளிதில் செரிமானமடையாது. எனவே அவை வாயு தொல்லையை ஏற்படுத்தி, குடலியக்கத்திலும் இடையூறை ஏற்படுத்திவிடும்.

நலன்விரும்பி
Leave a Reply

%d bloggers like this: