‘வேர்கடலை’ இதில் என்ன இருக்கிறது? Health benefits of peanuts
ஆண்மையை அதிகரிக்க பல மருந்துகளை சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கையான உணவுகளை சாப்பிடலாம். இயற்கை உணவுகளை சாப்பிடுவதால் ஆண்மையை அதிகரிக்க மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை காக்கவும் இவை உதவுகின்றன.
வேர்கடலை ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சைவமாக இருந்தால் வேர்கடலையை சாப்பிடலாம். அசைவத்திற்கு நிகராக சத்துக்கள் இந்த வேர்கடலையில் அடங்கியுள்ளது.
வேர்க்கடலை (நிலக்கடலை) ஒரு மிகச்சிறந்த பயிர் வகை. இந்தியாவிலும் சீனாவிலும் அதிகம் பயன்பாட்டில் உள்ள பயிர் நிலக்கடலை. 16 ம் நூற்றாண்டில் இது உலகம் முழுக்க பரவ தொடங்கியது.
நம் ஊரில் நமது சமையல் பயன்பாட்டில் முக்கியம் பங்குவகிப்பது கடலையில் இருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய் தான், இதனால் இயற்கையாகவே உலகில் மற்ற இன மக்களை சந்தித்த உடல் உபாதைகள், நோய்கள் நமக்கு வரவில்லை. வேர்கடலை இனப்பெருக்கத்திற்கு மிகவும் உகந்தது. காட்டில் கடலை சாகுபடி இருக்கும் காலத்தில் எலிகள் அதிக குட்டிகள் ஈனும், அதேபோல் கடலை செடி மேயும் ஆடு,மாடு என்று அனைத்து உயிர் இனங்களும் குறையின்றி குட்டிகள் ஈனும். மனிதனுக்கும் அவ்வாறே. வேர்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வருபவர்கள் நம்ம ஊர் இலவட்டகல்லை அசால்டாக தூக்கிவிடுவர்.