mouth ulcer

வாய்ப்புண் தொந்தரவு உங்களுக்கு இருக்கா?

1213

உங்களுக்கு வாய்ப்புண் தொந்தரவு இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க…

Have mouth ulcer problem?

வாய்ப்புண்ணை போக்க நீங்கள் மருந்துகளை நாட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இதன் வலியை குறைக்க சில வீட்டு வைத்திய முறைகள் நமக்கு உதவியாக இருக்கும். அவை எவை என பார்க்கலாம். சில வீட்டுப் பொருட்கள் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.

வாய்ப்புண்கள் மிகவும் வேதனைக்கு உரியது. நீங்கள் எதாவது உணவை சாப்பிடும் போது கூட இந்த புண்கள் உங்களுக்கு வலியை கொடுக்கும். இதனால் நீங்கள் உணவை சரி வர சாப்பிட முடியாது. அதிலும் காரமான உணவுகளை நீங்கள் எடுத்துக் கொண்டால் உடனே எரிய ஆரம்பித்து விடும். இந்த சிறிய புண்களால் ஏற்படும் அசெளகரியம் உங்களுக்கு பலவித பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இதன் வீரியம் அதிகமாக அதிகமாக பிறகு குணமடைய பல நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

​வாய்ப்புண் (mouth ulcer)

புண்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வாயின் உட்புற பகுதிகளை தற்செயலாக கடித்தல், பற்கள் மற்றும் பல் துலக்குதல் போன்றவற்றில் ஏற்படும் உராய்வு, டென்டல் பிரேஸ்கள், விட்டமின் பற்றாக்குறைகள், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற விஷயங்கள் உங்களுக்கு வாய்ப்புண்ணை உருவாக்குகிறது. இந்த வாய்ப்புண்களை போக்க மேற்பூச்சு ஜெல்கள், க்ரீம்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது உங்க வலியை குறைக்க பயன்படுகிறது. இருப்பினும் இந்த வாய்ப்புண்ணை போக்க சில வீட்டு வைத்திய முறைகள் உங்களுக்கு உதவி செய்யும் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

​தேன்

வாய்ப்புண்களுக்கு தேன் ஒரு சிறந்த ஒன்றாகும். இதில் நிறைய பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியை வறண்டு போகாமல் உலர்த்துவதன் மூலம் இதை சரி செய்யலாம். ஒரு சிட்டிகை தேனில் சிறுதளவு மஞ்சள் சேர்த்து பயன்படுத்தி வாருங்கள். இது உங்க வாயைச் சுற்றி இருக்கும் புண்களை குணப்படுத்த உதவுகிறது. இதை ஒரு நாளைக்கு 3-4 தடவை தடவி வாருங்கள்.​

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் போன்றவை காணப்படுகிறது. இது உங்களுக்கு வாய்ப்புண்ணால் ஏற்படும் வலியை குறைக்க பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நீங்கள் பல தடவை தேங்காய் எண்ணெய்யை அப்ளே செய்யும் போது நன்மையை பெற முடியும். ஒரு அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்ட பகுதியில் அப்ளே செய்யுங்கள். இதை ஒரு நாளைக்கு பல முறை செய்து வரும் போது நீங்கள் நன்மையை பெற முடியும்.

​கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் எப்பொழுதுமே நல்ல குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. வாயைச் சுற்றி இருக்கும் புண்களின் வலியை குறைக்க பயன்படுகிறது. எனவே வாய்ப்புண்ணை போக்க கற்றாழை ஜெல்லை அந்தப் பகுதியில் தடவி வாருங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதைச் செய்யும் போது நீங்கள் நன்மையை பெற முடியும். கற்றாழை ஜெல்லை மட்டுமே பயன்படுத்துங்கள். கற்றாழை சாற்றை பயன்படுத்தாதீர்கள்.

​துளசி இலைகள் – Thulasi Leaves

துளசி இலைகள் வாய்ப்புண்களை குணப்படுத்த பெருமளவில் உதவுகிறது. இது வாய்ப்புண்களை திறம்பட குணப்படுத்த உதவுகிறது. இந்த துளசி இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் வாயில் புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை போக்க உதவுகிறது. இது குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது. துளசி இலைகளை மென்று வாருங்கள். இது வாய்ப்புண்களில் இருந்து வலி நிவாரணம் பெற உதவுகிறது. எனவே சில துளசி இலைகளை வாயில் போட்டு மென்று விட்டு வாயை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவுங்கள். இது உங்க வாய்ப்புண் வலியை குறைக்க உதவி செய்யும்.

உங்களுக்கு துளசி இலைகள் கிடைக்கவில்லை என்றால் வெந்தய இலைகளைக் கூட நீர் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு வாயை ஒரு நாளைக்கு 2, 3 தடவை கொப்பளியுங்கள்.

​ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு பிரபலமான வீட்டுப் பொருளாகும். இது பல குறைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. இதன் அமிலத்தன்மை புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கொல்ல உதவுகிறது. உங்க வலியை குறைக்க ஆப்பிள் சிடார் வினிகருடன் தண்ணீர் கலந்து வாயை கொப்பளியுங்கள். இது உங்க வலியை குறைக்க உதவி செய்யும்.

​உப்பு கலந்த நீர்

உப்பு கலந்த நீரைக் கொண்டு நீங்கள் வாயை கொப்பளிக்கும் போது அது உங்க வாய்ப் புண்ணை ஆற வைக்க உதவுகிறது. நீரில் கலக்கப்படும் உப்பு உங்க புண்களை குணப்படுத்தவும், பாக்டீரியாக்களை குறைக்கவும் உதவுகிறது. கெட்ட சுவாசத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை போக்க உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயைக் கழுவுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வாருங்கள்.

​டூத்பேஸ்ட் (Toothpaste)

டூத்பேஸ்ட்டில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை காணப்படுகிறது. அவை வாய்ப் புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை குறைக்க பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் பற்பசையை பயன்படுத்தும் போது அதை குளிர்விக்க டூத்பேஸ்ட் உதவுகிறது. எனவே ஒரு ஏர் பட்ஸை கொண்டு டூத்பேஸ்ட்டை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் அப்ளே செய்யுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை என இதை செய்து வாருங்கள். நன்மை கிடைக்கும்.​

பூண்டு (Garlic)

பூண்டில் இயற்கையாகவே ஆன்டி மைக்ரோபியல் தன்மை காணப்படுகிறது. இதில் அல்லிசன் என்று பொருள் இருப்பதால் வாய்ப்புண்களால் ஏற்படும் வலியை குறைக்க பயன்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை என பூண்டு பற்களை எடுத்து வாய்ப்புண் பகுதியில் தடவி வாருங்கள்.​

அதிமதுரப்பொடி (Athimathuram Powder)

வாய்ப்புண்கள் சில நேரங்களில் வயிற்று எரிச்சலால் கூட ஏற்படலாம். எனவே வாய்ப்புண்ணை சமாளிக்க அதிமதுரப்பொடியை பயன்படுத்துங்கள். இது வயிற்றை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது வாய்ப் புண்ணை குணப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள கிளிசரின் மற்றும் கார்பெனோக்சலோன் போன்ற சேர்மங்கள் உங்களுக்கு நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று அசெளகரியம் போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது. இது ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் அதிமதுரப் பொடி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதில் சில துளிகள் தேன் சேர்த்து கொள்ளுங்கள்.

​ஆரஞ்சு ஜூஸ் (Orange Juice)

ஆரஞ்சு ஜூஸில் விட்டமின் சி பற்றாக்குறை காணப்படுகிறது. இதுவும் உங்க வாய்ப்புண் அல்சரை குணப்படுத்த உதவுகிறது. எனவே ஆரஞ்சு பழச்சாறு குடிப்பது உங்க வாய்ப்புண்ணை போக்க உதவி செய்யும்.

our facebook page

keywords: mouth ulcer




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights