ADVERTISEMENT
Hajj 2024 More than 1,300 pilgrims die during Hajj

ஹஜ்ஜின் போது 1,300க்கு மேற்பட்ட ஹாஜிகள் மரணம்

Hajj 2024: More than 1,300 pilgrims die during Hajj

இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரையில் சவூதியின் மக்காவில் கடுமையான வெப்பம் காரணமாக 1,300க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள் இறந்ததாகத் தகவல்கள் உறுதியாகியுள்ளது.

சவூதியின் ஹெல்த் மினிஸ்டர் ஃபஹத் அல் ஜலாஜெல், 1,301 யாத்திரிகர்கள் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மரணங்கள் நேரடியாக வெயிலில் நீண்ட தூரம் நடந்ததால் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மரணமடைந்தவர்களில் பலர் முதியவர்கள் என்றும் நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் என்றும் தெரிவித்துள்ளார்.

83% மரணங்கள் அதிகாரப்பூர்வமாக ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படாத யாத்திரிகர்களால் நடந்துள்ளன என்று கூறினார்.

வெப்பநிலை 51.8°C வரை ஏறியதால், இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்கு மக்காவுக்கு வந்தவர்களில் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். யாத்திரிகர்கள் இதை “இந்த ஆண்டு வெயிலால் ஹஜ் கிரியைகள் செய்தற்குச் சவாலாக இருந்தது” என விவரித்தனர் மேலும் வெப்பத்தால் மயக்கம் அடைந்தவர்கள் அதிக அளவிலிருந்தனர் எனத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

8 நாடுகளிலிருந்து அதிகாரிகள் அவர்களின் யாத்திரிகர்களின் மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்:

எகிப்து: 672
மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தியர்கள், 672 பேர் இறந்துள்ளனர். 25 பேர் இன்னும் காணவில்லை. எகிப்து 16 சுற்றுலா நிறுவனங்களின் உரிமங்களைத் தடை செய்துள்ளது. இவர்களே இந்த மரணங்களுக்குப் பொறுப்பு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் யாத்திரிகர்களை ஹஜ் விசாக்கள் மாற்றாகத் தனிப்பட்ட விசாக்களில் அனுப்பியதாகவும், எந்தவிதமான சேவைகளையும், மருத்துவ உதவியையும் வழங்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியா: 236
மொத்தம் 236 இந்தோனேசியர்கள் இறந்துள்ளனர். என்ன பிரச்சனையினால் இறந்தனர் எனக் குறிப்பிடவில்லை.

ஜோர்டான்: 99
99 ஜோர்டான் யாத்திரிகர்கள் இறந்துள்ளனர். இன்னும் சிலர் காணாமல் போனதால் தேடுதல் முயற்சிகள் தொடர்கின்றன. காணாமல் போன 112 பேரில் 97 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். ஜோர்டானிலிருந்து அதிகாரப்பூர்வ அனுமதியின்றி யாத்திரைகளை ஏற்பாடு செய்த நிறுவனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக 28 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

துனீசியா: 49
குறைந்தது 49 துனீசியர்கள் சவூதி அரேபியாவில் இறந்துள்ளனர். சில குடும்பத்தினர் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர். இந்த மரணங்கள் சம்பந்தமாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து துனீசியா அதிபர் கைஸ் சையத், மத விவகாரங்கள் துறை அமைச்சர் இப்ரஹிம் சயிபியின் பதவி நீக்கினார்.

ADVERTISEMENT

இந்தியா: 98
98 இந்தியர்கள் இறந்துள்ளனர். சில மரணங்கள் இயற்கை காரணங்களாலும், முதியவர்களின் வயதினாலும் ஏற்பட்டதாகவும், சிலவற்றுக்கு வெப்பநிலை காரணமாக ஏற்பட்டதாகவும் சவூதி அரேபியாவில் உள்ள தூதர் ஒருவர் கூறினார்.

மற்ற நாடுகள்:
ஈரான், செனகல் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் மரணங்களை அறிவித்துள்ளன.

ஹஜ் என்பது முஸ்லிம்களின் முக்கிய 5 கடமைகளுள் ஐந்தாவது ஒன்றாகும். ஆனால் அவை ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் . அதுவும் குறிப்பிட்ட அந்த அரபு மாதத்தில்தான் செய்ய வேண்டும்.

ஹஜ் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றது, ஆனால் ஒவ்வொரு நாட்டிலிருந்து அந்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கே அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகப் பலர் இந்த புனித யாத்திரை செய்யப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள்.

ஹஜ்ஜூக்கான அனுமதிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட அளவு ஒதுக்கப்படுகின்றது. இதன் காரணமாக அனுமதி பெறுவதற்கு அதிக செலவு உண்டாகிறது. சிலர் அனுமதியின்றி ஹஜ் செய்ய முயல்கிறார்கள். இது போன்று அனுமதியில்லாமல் ஹஜ் செய்ய வருபவர்கள் பிடிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்த வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஹஜ் யாத்திரையின் வெளிப்புற சடங்குகள் கடந்த சில ஆண்டுகளாகச் சூடான கோடையில் நடந்துள்ளது. ஹஜ் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில (கிரெகோரியன்) நாட்காட்டியில் 11 நாட்கள் முன் செல்கிறது என்பதால் அடுத்த ஆண்டு இது ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறும். இது குளிர்ந்த காலநிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வில், காலநிலை மாற்றம் காரணமாக, 2047-2052 மற்றும் 2079-2086 ஆண்டுகளுக்கு இடையில் ஹஜ்ஜின் சமயங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Our Facebook Page

ALSO READ:
UAE : கூட்ட நெரிசலை தடுக்க ஆன்லைன் செக்-இன்.!
மஸ்கட் – ரத்தம் தானம் செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு
ஷார்ஜா: கோடை வெயிலுக்கு இலவச மோர் வழங்கி வரும் தமிழர் உணவகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *