Hair care tips

ஆண்களுக்கான தலை முடி பராமரிப்பு டிப்ஸ்..!

194

பொதுவாக பெண்களுக்கும் ஆண்களுக்கும் தலை முடியில் மாற்றும் ஏதும் பெரிதாக இல்லை. ஆனால் ஆண்களும் பெண்குளும் தங்கள் முடியை பராமரிப்பதில் மாறுபடுகின்றனர். Hair care tips for men. அதிகமான பதிவுகளில் பெண்களுக்கான முடியை பராமரிப்பதற்காக தகல்வல்கள் இணையதளங்களில் கொட்டி கிடக்கின்றது. நமது தளத்தில்கூட பல தடவை பதியப்பட்டுள்ளது. ஆகையால் இந்த தடவை ஆண்களுக்கான தலை முடி பராமரிப்பை பார்க்க போகிறோம்.

ரொம்ப சிம்பிள்: Hair care tips for men.

ஆரம்பத்தில் சொன்ன மாதிரி ஆண்களும் பெண்களும் தங்கள் தலைமுடியை நிர்வகிக்கும் விதத்தில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பொதுவாக ஆண்கள் தங்கள் தலைமுடியை காற்றில் உலர்த்திவிடுவார்கள். இதற்காக அதிகமாக ஏதும் மெனக்கெடுவது இல்லை. சொல்லப்போனா ரொம் சிம்பிளா தலையை துவட்டி விட்டுவிட்டு  சீவிவிட்டு சென்றுவிடுவார்கள்.

ஆனால் பெண்கள் அப்படி இல்லை, முடியை காயவைப்பதற்கு நிறைய ப்ராஸஷ் இருக்கின்றது. இதற்கு காரணமும் இருக்கின்றது. பெரும்பாண்மையான ஆன்கள் மிக பெரியதாக முடியை வளர்ப்பதில்லை. அதனால் முடி உளர்வதற்கு நேரம் அதிகம் பிடிப்பதில்லை. பெண்கள்தான் தலை முடியை பெரிதாக வளர்ப்பதால் அதனை உளர்த்துவதற்கான காலம் கொஞ்சம் கூடுதலாக எடுத்து கொள்கிறது.

சரி எதற்கு ரொம்ப பெரிய இன்ட்ரோ, நீங்கள் உங்கள் தலை முடியை பராமரிக்கும் ஆணாக இருந்தால், உங்கள் தலைமுடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தப்பதிவை படியுங்கள்.


நேரத்தை மிச்சப்படுத்த சில டிப்ஸ்.


உச்சந்தலையை சுத்தமாக வைத்திருங்கள்:

சுத்தமான உச்சந்தலையே ஆரோக்கியமான உச்சந்தலையாகும். உச்சந்தலையை தொடர்ந்து சுத்தம் செய்யாவிட்டால், தலையில் நுண்ணுயிரிகள் தோன்றி பிரச்சனையை உண்டாக்கும். அதாவது பேன், பொடுகு போன்று ஏற்பட்டு அதனால் தலை அறிப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

கண்டதை வாங்கி தடவாதீர்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு முதல் ஸ்டைலிங் கிரீம் போன்றவற்றை நல்ல தரமானதாக வாங்கி பயன்படுத்துங்கள். அதே போல் உங்கள் தலை முடிக்கு தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும். அதாவது உங்களுக்கு நேரான முடியா? சுருள் வடிவத்தில் இருக்கிறதா? அலை அலையாக இருக்கிறதா? மென்மையான முடியா? அதற்கு உகந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

சீராக முடியை வெட்டுங்கள்:

எங்கெல்லாம் முடி வளர்கிறதோ அதை அப்படியே விட்டுவிடாமல் முறையாக வெட்டி வேண்டும். உதாரணத்திற்கு ஒரு சிலருக்கு கழுத்தின் பின்புறமும் பக்கவாட்டு பகுதிகள் மற்றும் காதுகள் போன்ற தலைக்கு அப்பால் ஆண்களின் முடி வளரும். அதை சீராக சரி செய்து அழகு படுத்தி கொள்ள வேண்டும்.


நல்ல தூங்கினால் இவ்வளவு நன்மையா? 

இரவு தூக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்.


உலர்ந்த உச்சந்தலைக்கு

வறண்ட உச்சந்தலையால் பல பிரச்சனைகள் வரலாம். தோலழற்சியால் அரிப்பெடுத்து பெரும் தலைவலியை உண்டாக்கிவிடும். இதற்கு காரணம் நம் உடம்புக்கு போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

வறண்ட தலை எப்படி சரிசெய்யலாம்?

  • வறண்ட தலை பிரச்சனைக்கு தரமான சாம்பு வாங்கி பயன்படுத்த வேண்டும்.
  • தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு தலை முடியை பாதுகாக்கலாம்.

முடியை அழகாக்குவதில் கவனம் தேவை:

சிலர் தங்கள் முடியை நேராக்கவும் அல்லது சுருள் சுருள் போல மாற்ற ஆசைப்படுவார்கள். இதற்காக கண்ட பொருட்களை வாங்கி தலையில் தடவுவார்கள். அதுவே பின்னாலில் அவர்களுக்கு பிரச்சனையாக முடிகிறது.

நமக்கு எந்த வகையான தலைமுடி? அதற்கு எது பொருந்தும் அல்லது எது பொருந்தாது? என்று ஆலோசனை பெற்ற பிறகு தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். அதுவே நல்ல பயன் தரும்.


‘புளி’  நம் உடல் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா?

சுறுசுறுப்பா இருக்க சில டிப்ஸ்..!


எப்போதும் எண்ணெய் பசையுடன்..

சிலருக்கு எப்போது பார்த்தாலும் தலை முடியான எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும். இது போன்ற பிரச்சனைகளில் இருப்பவர்கள் புதினா கலந்த ஷாம்பை வாங்கி பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.

“மருந்துக் கடையில் விற்கப்படும் பல ஷாம்பூக்களில் இந்த பொதினா கலந்த சாம்பு  கிடைக்க வாய்ப்புள்ளது. இது எப்படி பயன் அளிக்கும் என்று கேட்கலாம்? உச்சந்தலையையும் முடியையும் நன்றாக உலர வைக்க உதவுவதாக ஆய்வாலர்கள் தெரிவிக்கின்றனர்.

தலை முடியில் பிரச்சனை வருவதற்கு முன்பாக இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  • உச்சந்தலையில் அரிப்பு
  • குறிப்பிடத்தக்க முடி இழப்பு
  • முடி மெலிந்து பொசு பொசுவென்று பஞ்சு போல் மாறுவது.
  •  முடி உதிர்வு என்று வரும்போது, ஒரு நாளைக்கு சுமார் 100 முடிகள் உதிர்வது இயல்பானது என்று டாக்டர் லோப்ரெஸ்டி கூறுகிறார். “அதை விட அதிகமாக உதிர்தல் என்பது கவணிக்கப்படவேண்டியதாகும்.

உங்கள் தலைமுடியை பராமரிப்பது ஆரோக்கியமானதாகும். ஆனால் தலைமுடியின் வகையை அறிந்து, அதற்கு ஏற்றார் போல் பராமரிக்க வேண்டும். அதுதான் சிறந்த வழி என்பதை தெரிந்து அதன்படி உங்கள் தலை முடியை பராமரியுங்கள். என்றென்றும் அழகான தோற்றத்துடனும் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துக்கள்.

Our Facebook Page

Keywords: Hair care tips for men, Hair care tips in Tamil.

Buy your favorite Books Online
Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights