VBM-6

வந்தே பாரத்: 6 -ம் கட்டமாக சவூதியில் இருந்து சென்னைக்கு விமானம்.

356

வந்தே பாரத்: 6 -ம் கட்டமாக சவூதியில் இருந்து சென்னைக்கு விமானம்.


Gulf News: VBM-6 Flight from Saudi Arabia to Chennai in the 6th phase.


வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டமாக சவூதியிலிருந்து இந்தியா வரும் விமானங்களின் பட்டியலை சவூதியின் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டமாக விமானங்கள் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி, தற்பொழுது செப்டம்பர் 1 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை சவுதியில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களின் பட்டியலை இந்திய தூதரகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. gulf news tamil

இதில் ஏழு விமானங்கள் இந்தியாவிற்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விமானம் மட்டும் வரும் செப்டம்பர் 2 ம் தேதி சவூதியின் ரியாத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சர்வதேச விமான நிலையம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. saudi news tamil

இந்தியாவிற்கு வர வேண்டி தூதரகத்தில் பதிவு செய்தவர்கள், செப்டம்பர் 2 ம் தேதி இண்டிகோ விமானம் மூலம் ரியாத்தில் இருந்து சென்னை செல்ல விருப்பமிருந்தால் விமான நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று விமான டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு இந்திய தூதரகம் அதில் தெரிவித்துள்ளது. இருப்பினும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. gcc news tamil

keyword: gulf news tamil, saudi news tamil, gcc news tamil




Leave a Reply

%d bloggers like this: