no grace period

குவைத்தில் செப்டம்பர் மாதத்தில் முடியும் விசாக்களுக்கு சலுகை இல்லை.

130

குவைத்தில் செப்டம்பர் மாதத்தில் முடியும் விசாக்களுக்கு சலுகை இல்லை.

Gulf News: no grace period for visas that expired in September.

குவைத்தில் காலாவதியான ரெசிடென்ஸ் மற்றும் விசிட் விசாக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தானாகவே விசா நீட்டிப்பு செய்து அறிவித்திருந்தது. அதாவது, மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலான காலங்களில் காலாவதியான விசாக்களை வைத்திருக்கும் நபர்களுக்கு நவம்பர் மாத இறுதி வரையிலும் விசா நீட்டிப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பின்னர் காலாவதியான குவைத் ரெசிடென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு நவம்பர் இறுதி வரை வழங்கப்பட்டிருக்கும் சலுகை காலம் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 1 ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் விசா காலாவதியாகி அதனை புதுப்பிக்காமல் இருக்கும் வெளிநாட்டினருக்கு ஒரு நாளைக்கு 2 குவைத் தினார் என்ற அடிப்படையில் அவர்கள் விசாவினை நீட்டிப்பதற்கான விண்ணப்பத்தை ரெசிடென்ஸ் விவகாரங்களுக்கான துறைக்கு சமர்ப்பிக்கும் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 ம் தேதிக்குப் பிறகு காலாவதியான விசாவினை வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் விசாவினை புதுப்பிக்காததற்கு கூறப்படும் எவ்வித காரணமும் கருத்தில் கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

keyword: Kuwait, Kuwait news, Kuwait News today, Gulf News, Gulf News today, Gulf News Tamil




Leave a Reply

%d bloggers like this: