சென்னை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களுக்கு எதிஹாத் விமானங்கள் இயக்கம்.

376

சென்னை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களுக்கு எதிஹாத் விமானங்கள் இயக்கம். Etihad flights to major cities begin.

வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட மத்திய கிழக்கு பிரதேசங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களுக்கு விமான சேவைகளை மீண்டும் துவங்க இருப்பதாக எதிஹாட் ஏர்வேய்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

4 விமானங்கள் மூலம் மும்பை தொழிலாளர்கள் உ.பி. செல்ல அமிதாப் பச்சன் உதவி!

போட்டி தேர்விற்கு இணையவழி பயிற்சி வகுப்பு: அரியலூர் ஆட்சியர் ரத்னா

[the_ad id=”7251″]

ஐக்கிய அரபு அமீரத்தின் தலைநகரான அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எதிஹாத் ஏர்வேய்ஸ் தற்போது 20 நகரங்களுக்கு தனது சேவையை வழங்கிவருகிறது. அடுத்தமாதம் முதல் அம்மான், பஹ்ரைன், கெய்ரோ, குவைத், மஸ்கட் மற்றும் ரியாத் ஆகிய வளைகுடா நாடுகளுக்கும் பேங்காக், பெய்ஜிங், பெங்களூரு, சென்னை, டெல்லி, இஸ்லாமாபாத், கொச்சி, லாகூர், மும்பை மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்களுக்கும் தமது விமான சேவையை துவங்க இருப்பதாக எதிஹாத் ஏர்வேய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிப்படியாக தமது சேவையை அதிகரிக்க உள்ளதாக எதிஹாத் ஏர்வேய்ஸ் தெரிவித்துள்ளது.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: